SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணி திருவிழா தொடங்கியது

2018-08-30@ 15:07:02

திருச்செந்தூர்: பக்தர்களின் பக்தி முழக்கத்துடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 8ம்தேதி தேரோட்டம் நடக்கிறது. அறுபடை வீடுகளில் 2வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஆவணி திருவிழா இன்று துவங்கியது. வரும் செப். 10ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி இன்று அதிகாலை ஒரு மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது.

காலை 4.15 மணிக்கு கோயிலில் இருந்து பல்லாக்கில் கொடிப்பட்டம் எழுந்தருளி 9சந்தி வழியாக மீண்டும் திருக்கோயில் வந்து சேர்ந்தது. பின்னர் கொடிமரத்தடியில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு வேதமந்திரங்கள் முழங்க 5.40 மணிக்கு சிவசுப்பிரமணியபட்டர் கொடியேற்றினார். தொடர்ந்து கொடிமரத்திற்கு பலவகையான அபிஷேகம், சிறப்பு அலங்காரமாகி 6.45 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள், கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா என்று கோஷங்கள் எழுப்பினர்.

இன்று மாலை 4 மணிக்கு அப்பர் சுவாமிகள் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி திருவீதிகளில் உழவாரப்பணி செய்து திருக்கோயில் சேர்தல். இரவு 7 மணிக்கு ஸ்ரீபெலி நாயகர் அஸ்திரத்தேவருடன் தந்தப்பல்லக்கில் கோயிலில் இருந்து புறப்பட்டு 9 சந்நிதிகளில் உலா வந்து கோயில் சேர்தல். தினமும் காலை, மாலை சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வருகிறார். முக்கிய விழாவான தேர்த்திருவிழா செப். 8ம்தேதி நடக்கிறது. ஆவணி திருவிழாவையொட்டி தினமும் காலை, பகல், மாலை, இரவு ஆகிய நேரங்களில் திருக்கோயில் கலையரங்கில் சொற்பொழிவு, இன்னிசை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகஸ்தர்கள் செய்து வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-02-2019

    22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • perufloodrain

    பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • himachal

    இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

  • navamkolumpu

    கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்

  • araliparaijallikattu

    அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்