SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

உசிலம்பட்டி அருகே அக்னி வீரபத்திரர் சாமி கோயிலில் கும்பாபிஷேக விழா

2018-08-30@ 15:00:46

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே, வகுரணியில் உள்ள அக்னி வீரபத்திரர் சாமி கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனையொட்டி, நேற்று முன்தினம் தேவதா அணுக்ஞை, மஹா கணபதி உள்ளிட்ட முதல் கால யாக பூஜைகளும், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, சங்கல்பம் உள்ளிட்ட இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன. நேற்று விநாயகர் பூஜை, சூரிய கும்பபூஜை உள்ளிட்ட மூன்றாம் கால யாக பூஜை நடைபெற்றது. இதனையடுத்து, அக்னிவீரபத்திரர் நாமாவளி அர்ச்சனை, கடம் புறப்பாடாகி கோயிலைச் சுற்றி வலம் வந்து, விமானக் கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதன் பின்னர் தீபாராதனை காட்டப்பட்டு, மூலவருக்கு 11 வகையான சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அக்னி வீரபத்திரர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காண குவிந்தனர். இதற்கான ஏற்பாடுகளை வகுரணி, நடுமுதலைக்குளம் அக்னி வீரபத்திரர்சாமி திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்