SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

குற்றாலநாதர் கோயில் வருஷாபிஷேகம்

2018-08-30@ 15:00:06

தென்காசி: குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோயிலில் நேற்று வருஷாபிஷேக விழா  நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். குற்றாலம் திருக்குற்றாலநாதர் சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதம் வருஷாபிஷேக விழா நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு வருஷாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று காலையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடந்தது.

அதனைத்தொடர்ந்து விமான கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடந்தது. பின்னர் மூலஸ்தானம் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை மற்றும் சுவாமி, அம்பாள் வீதி உலா நடந்தது. இதில் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கலந்து கொன்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்