SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராமியணஅள்ளி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

2018-08-30@ 14:59:29

பாப்பிரெட்டிப்பட்டி: ராமியணஅள்ளியில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. ராமியண அள்ளியில் விநாயகர், மகா மாரியம்மன், ஞானாம்பிகை, காளஹஸ்தீஸ்வரர், சுப்பிரமணியர், நவகிரக ஆலயங்களுக்கும் மூலவர்களுக்கும் கும்பாபிஷேக விழா நடந்தது. 2 நாட்கள் நடைபெற்ற விழாவில், முதல் நாள் கணபதி, மகாலட்சுமி, நவகிரக யாக பூஜைகளும், தீர்த்தக்குடம், பாலிகை அழைத்துவருதல், வாஸ்து பூஜை, முதற்கால யாக பூஜையும், கோபுர கலசம் வைத்தல், அஷ்டபந்தனம் சாற்றுதல் ஆகியவை நடந்தது.

அதை தொடர்ந்து, 2ம் கால யாக பூஜை, நாடிசந்தானம், யானை, குதிரை அணிவகுப்புடன் மேளதாளம் முழங்க, கலசம் புறப்பாடு நடந்தது. அதனை தொடர்ந்து அனைத்து கோபுர கலசங்களுக்கும், மூலவருக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை திருப்பணி விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்