SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திண்டுக்கல் அருகே புங்கோடை கிராமத்தில் ஸ்ரீகிருஷ்ணன் கோயில் கும்பாபிஷேகம்

2018-08-30@ 14:56:03

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே புங்கோடை கிராமத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. திண்டுக்கல் திருச்சி சாலையில் அமைந்துள்ளது புங்கோடை கிராமம். இங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. முன்னதாக நேற்று முன்தினம் காலை வாஸ்து சாந்தி, ஸ்ரீவிநாயகர் பூஜை உள்ளிட்ட முதல் காலத்துடன் தொடங்கிய பூஜையை தொடர்ந்து நேற்று அதிகாலை 4 மணிக்கு 3ம் கால யாக வேள்வியும், தொடர்ந்து சிலைக்கு உயிரூட்டும் நிகழ்ச்சியும் 4ம் கால வேள்வியும், பூர்ணாகுதியும் நடைபெற்றது.

பின்னர் புனித தீர்த்தங்கள் அடங்கிய கடம் புறப்பாடும் முடிந்தபின் கர்ப்பகிரக கலசம் மற்றும் கோபுர கலசங்களுக்கு பக்தர்களின் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் 10.30 கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதிலுமிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் பெற்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • varanasi_modi123

    டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

  • china_lamfesti1

    சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது

  • 2mili_nall

    காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

  • pakisthan_saudi1

    பாகிஸ்தானில் சவுதி இளவரசர் சுற்றுப்பயணம் : நாட்டின் மிக உயரிய ‘நிஷான்-இ-பாகிஸ்தான்’ விருது இளவரசருக்கு அளிக்கப்பட்டது

  • pulwama_kashmirthakuthal11

    காஷ்மீரில் புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், ஜம்முவில் 5-வது நாளாக ஊரடங்கு உத்தரவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்