SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராணிப்பேட்டை பாலார் நகர் முத்துமாரி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

2018-08-30@ 14:54:47

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை பாலார் நகர் முத்துமாரி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ராணிப்பேட்டை பாலார் நகரில் அமர்ந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீமுத்துமாரி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக, கடந்த 28ம் தேதி காலை கணபதி அனுக்ஞை, கிராம தேவதை பூஜை, முதல் கால யாகபூஜை, மற்றும் கணபதி ஹோமம் மகா தீபாராதனை நடந்தன. நேற்று காலை 2ம் கால யாகபூஜை 8 மணிக்கு தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

இதனை தொடர்ந்து காலை 10 மணியளவில் திருவலம் சர்வ மங்களா பீடம் சாந்தா சுவாமிகள் தலைமை தாங்கி கோயில் கோபுர விமானம் மற்றும் வலம்புரி வினாயகர், பாலமுருகன், துர்கை, பராசக்தி, ஸ்ரீமுத்துமாரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். இதனை தொடர்ந்து மகா அபிஷேகம், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், சிறப்பு அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில், சிறப்பு அழைப்பாளர்களாக எம்எல்ஏ ஆர்.காந்தி, ராணிப்பேட்டை பிஸ்வாஸ் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பள்ளி தலைவர் கமலா காந்தி, தொழிலதிபர்கள் எஸ்.எம்.சுகுமார், கே.எம்.பாலு, கே.எம்.கே.சிவலிங்கம், மதிவாணன், கலைவாணன், அம்பலவாணன், தமிழ்வாணன், ஜெயசங்கீதா அசேன், மருத்துவர் ராஜேஸ்வரி பழனிசாமி, பூங்காவனம், ஏர்டெல் குமார் உள்பட பலர் கலந்துகொண்டு முத்துமாரி அம்மனை வழிபட்டு சென்றனர்.    

ஏற்பாடுகளை ஸ்ரீமுத்துமாரி அம்மன் கோயில் விழா குழுவினர்கள் எஸ்.கிருஷ்ணன், ஆர்.இ.எழில்வாணன், நித்தியானந்தம், விஜயகுமார், கருணாகரன், சின்னு, ரவி, கண்ணன், ராமு, புண்ணியமூர்த்தி, தேவன், ஜெகதீசன், சுகுமார், மணி, சந்திரன், மோகன்ராஜ், சந்திரேசகரன், ஜெயகோபி மற்றும் பாலார் நகர் பொதுமக்கள் இளைஞர்கள் பலர் செய்திருந்தனர். தொடர்ந்து, நேற்று மாலை கோதண்டராம குருசாமியின் அருள் இசை அம்மன் பாடல்கள் நிகழ்ச்சி நடந்தது. நாளை மாலை நியூ ஸ்வர்காவின் இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது. 

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்