SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மெய்பொருள் அருளும் ஞானமூர்த்தி

2018-08-27@ 09:39:32

மகாபாரதத்தை எழுதிய வியாச முனிவர் பாரதத்தின் பல தலங்களுக்கும் சென்று இறைவனை வழிபட்டு வந்தார். தன்னுடைய திருத்தல யாத்திரையின் போது தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகில் இருக்கும் ‘முதல் கட்டளை’ என்ற இயற்கை அழகு கொஞ்சும் ஊருக்கு ஒரு முறை வருகை புரிந்தார். விவசாய பூமியான இவ்வூரின் இயற்கை அழகு வேதவியாசருடைய உள்ளத்தை வெகுவாகக் கவர்ந்தது. இந்த ஊரிலேயே சில காலம் தங்கியிருக்க தீர்மானித்தார். இத்தலத்திலேயே சிவலிங்கத் திருமேனி ஒன்றை பிரதிஷ்டை செய்து நாள் தோறும் வழிபட்டு வந்தார். ஈசன் அருளிய வேதங்களை ஓதினார். ஆனாலும் அந்த வேதங்களின் உண்மைப் பொருளை உணர முடியாமல் தவித்தார். மனமுருக ஈசனிடம் வேண்டிக்கொள்ள “யாம் உணர வைப்போம்” என்று அசரீரி ஒலித்தது. அதனால் மன நிம்மதி அடைந்தார்.

ஒரு நாள் வியாசர் முன் சிவனடியார் ஒருவர் தோன்றினார். அவரை வரவேற்று உபசரித்தார் வியாசர். வேதங்களின் மெய்ப்பொருள் பற்றிய ஐயத்தை நீக்கவே யாம் வந்தோம் என்று சிவனடியார் கூறியதும் வேத வியாசர் மகிழ்ச்சியும், ஆர்வமும் பொங்க அடியவரை பணிந்து வணங்கினார். சிவனடியார் ‘முனிவரே எம்மை உற்று நோக்குங்கள், வேதத்தின் மெய்ப் பொருளை அறியலாம்’ என்றார். வியாசர். அடியாரை உற்று நோக்க அங்கே ஈசன் காட்சியருள, வேதத்தின் மெய்ப்பொருள் சிவபெருமானே என்று உணர்ந்தார் வியாசர். இச்சம்பவம் நிகழ்ந்த திருத்தலம்தான் முதல் கட்டளை கிராமம். கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் தஞ்சாவூர் நாயக்கர்கள் ஆட்சியின் கீழ் வந்தது. மன்னர் அச்சுதப்பர் சிறந்த சிவபக்தர்.

இவர்தான் திருவிடைமருதூர் பெருநல முலையம்மன் உடனுறை மகாலிங்க ஸ்வாமி கோயிலின் ஆடிப்பூர திருவிழாவிற்காக முதல் கட்டளை கிராமத்தை நன்கொடையாக கி.பி.1571ம் ஆண்டு கொடுத்திருக்கிறார் என்று இலந்துறை கல்வெட்டு கூறுகிறது. வியாசருக்கு மெய்ஞானம் அளித்ததால் இவ்வூர் இறைவன் மெய்ஞான மூர்த்தி என்றும், அம்பாள் ஞானாம்பிகை என்றும் திருநாமம் கொண்டுள்ளார்.நாயக்கர்களுக்குப் பிறகு மராட்டிய மன்னர் துளஜா ஆட்சிக் காலத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டு தஞ்சாவூர் மண்ணில் நிச்சயமற்ற சூழல் நிலவியது. இது மன்னர் துளஜா மனதிலும் பெரும் மனக் குழப்பத்தை ஏற்படுத்தியது.

அவர் முதல் கட்டளைக்கு வந்து மெய்ஞான மூர்த்தியை வழிபட்டு தனது மனக்குழப்பம் நீங்கப் பெற்றார். இதனால், தன் காணிக்கையாக முதல் கட்டளை மெய்ஞான மூர்த்தி திருக்கோயிலுக்கு திருப்பணிகள் செய்து அக்கிராமத்திற்கு துளசேந்திரபுரம் என்று பெயரிட்டு பல தர்மங்கள் செய்தார். வியாசருக்கு மெய்ஞானம் அருளி, மன்னன் துளஜாவின் மனக்குழப்பம் நீக்கிய (இந்த இறைவன்) மெய்ஞானமூர்த்தி கல்வியில் பின் தங்கியோரை முன்னேற்றியும் மனக்குழப்பம் நீக்கியும் பக்தர்களுக்கு அருள் புரிந்தார். இத்திருக்கோயிலின் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் 23.08.2018 வியாழக்கிழமை அன்று நடைபெற உள்ளது. கும்பாபிஷேகப் பணியில் பங்கு கொள்ள விரும்பும் அன்பர்கள் 9865402603 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

ஆதலையூர் சூரியகுமார்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-02-2019

  16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • BrightBrussels

  ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

 • francelemon

  பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

 • TitanicReplicaChina

  முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

 • train18modi

  டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்