SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அம்மணி கொழுக்கட்டை

2018-08-23@ 16:01:06

தேவையானவை:

அரிசி கொழுக்கட்டை மாவு  ஒரு கப்,  
கறிவேப்பிலை  சிறிதளவு,
இட்லி மிளகாய்ப் பொடி,
தேங்காய் துருவல்  தலா 4 டீஸ்பூன்,
வறுத்துப் பொடித்த வேர்கடலை  கால் கப்,
எண்ணெய்  2 டீஸ்பூன்,
உப்பு  தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, தலா 1/2  டீஸ்பூன்.
பெருங்காயத்தூள் சிறிதளவு.

செய்முறை:

கடாயில் தண்ணீர் விட்டு, சிறிதளவு எண்ணெய், உப்பு சேர்த்து, அடுப்பில் வைக்கவும். கொதி வந்ததும் கறிவேப்பிலையை கிள்ளிப்  போடவும். தேங்காய் துருவல், இட்லி மிளகாய்ப் பொடி, அரிசி கொழுக்கட்டை மாவைத் தூவி கெட்டியாக கிளறவும். தீயை நிறுத்திவிட்டு,  ஆறவிடவும். கையில் எண்ணெயை தடவிக் கொண்டு, சிறிய நெல்லிக்காய் அளவு அரிசி மாவு கலவையை எடுத்து உருட்டி தயார்  செய்யவும். அவற்றை ஆவியில் வேக வைத்து எடுக்கவும். பின் தாளிக்க தந்துள்ள பொருட்களை தாளித்து நன்கு கிளறவும். பின்  வறுத்துப்பொடித்த வேர்க்கடலையித் தூவி நிவேதனம் செய்யவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்