SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லட்சுமி நரசிம்மரை வழிப்பட்டால் அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும்

2018-08-22@ 09:47:16

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களுக்கு நீரை வார்க்கும் மேட்டூர் அணை சேலத்தில் உள்ளது. சேலத்தில் இருந்து மேட்டூர் செல்லும் வழியில் உழவுக்கும், நெசவுக்கும் பிரசித்தி பெற்ற பகுதியாக இருப்பது நங்கவள்ளி. இங்குள்ள லட்சுமி நரசிம்மர் கோயில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. நரசிம்மர் சுயம்புவாக காட்சியளிக்கும் வைணவத் தலங்களில் இதுவும் ஒன்று. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நங்கவள்ளி பெரும் காடாக இருந்தது. அப்போது ஆந்திர மாநிலத்திலுள்ள மக்கள் தங்கள் பசுக்களுடன் இப்பகுதிக்கு பிழைக்க வந்தனர். அவர்களில் “தொட்டிநங்கை’ என்ற பெண்மணி ஒரு கூடையுடன் வந்து கொண்டிருந்தாள். கூடை கனத்தது. இறக்கி பார்த்தபோது, உள்ளே ஒரு சாளக்கிராம வடிவகல் இருந்தது. தனக்கு தெரியாமல் இந்தக்கல் எப்படி வந்தது என யோசித்தவள், அதை வெளியே எறிந்துவிட்டாள்.

சற்று தூரம் நடந்தபோது மீண்டும் கூடை கனத்தது. இறக்கி பார்த்தபோது கல் கூடைக்குள் இருந்தது. ஞாபக மறதியாக மீண்டும் கூடையிலேயே வைத்திருக்கலாம் என்ற நினைப்பில் எறிந்துவிட்டு நடந்தாள். ஆனால் மீண்டும் கூடை கனக்கவே, பயந்துபோன அவள் கூடையோடு அதை ஒரு குளத்தில் எறிந்துவிட்டாள். அதன்பிறகு, அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கு அருள்வந்து, தூக்கி எறியப்பட்ட அந்தக்கல் லட்சுமியின் வடிவத்தைக் கொண்டது என கூறினாள். ஊர்மக்கள் அந்த கல்லைத் தேடி எடுத்து பார்த்தபோது, பாம்பு புற்றுடன் லட்சுமிவடிவ கல்லை கண்டனர். அதன்பிறகு கீற்று ஓலைகளால் பந்தல் அமைத்து வழிபட்டு வந்தனர். விஜயநகர மன்னர்கள் இந்த கோயிலை விருத்தி செய்து பெரிய கோயிலாக கட்டினார்கள் என்கிறது தலவரலாறு.

கருவறையில் உள்ள சிலைகளுக்கு அக்காலக்கட்டத்தில் பால் அபிஷேகம் செய்து கற்பூர தீபம் காட்டும் முன்னரே புற்று மண் வந்து சிலைகளை மூடிவிடுமாம். இதனால் இங்குள்ள புற்றினை மறைத்து வைத்துள்ளனர். இப்புற்றில் எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் அது நிரம்பாது என்கின்றனர். இப்புற்று மண்ணினை தோல் நோய்கள் உள்ளோர் எடுத்து பூசினால் உடனே சரியாகிவிடும் என்பதும் ஐதீகமாக உள்ளது. 75 அடி ராஜ கோபுரத்தோடு காட்சி அளிக்கும் இக்கோயிலில் பல்வேறு கடவுள்களுக்கு தனித்தனியே கோயில்கள் உள்ளன. தீராத நோய்கள், தோல் சம்பந்தமான நோய்கள், கடன் பிரச்னை, குழந்தை பாக்கியம் முதலான அனைத்து வேண்டுதல்களுக்கும் இங்கு வந்து வழிபட்டால் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இக்கோயில் சோமேசுவரர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு சிவனும், பெருமாளும் ஒரு சேர இருப்பது மேலும் சிறப்பு. சைவ, வைணவ ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டான திருத்தலமாகவும் இது திகழ்கிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-02-2019

  17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 16-02-2019

  16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • BrightBrussels

  ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

 • francelemon

  பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

 • TitanicReplicaChina

  முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்