SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பலன் தரும் ஸ்லோகம் : (திருமகளின் திருவருள் கிட்ட)

2018-08-17@ 16:39:27

புனிதமே கமல மாதே! புள்ளூர்ந்தான் போற்றும் தேவி!
இனிய பத்மாசனத்தில் இருப்பவள் நீயே அன்றோ!
துணிவுடை வைணவீ உன்றன் திருவடி தொழுவதற்கே
அணுகினோம் நோக்கு தாயே! அவதியை நீக்கு தாயே!
செல்வமென்று சொன்னால் செல்வி நீதான் ஈவாய்!
வெல்வது நீயே என்றும்! வேறென அனைத்தும் நீயே!
பல்குணப் பரந்தாமன்பால் பற்றுடை திருவே உன்னை
பல்கிய மலர்கொண்டேத்திப் பணிந்தனம் காக்க தாயே!
கண்ணன் மார்பில் வாழும் கமலை நீ அன்னை நீயே!
கண்ணனின் சாயல் பெற்ற காரிகை நீயே தாயே!

பொதுப் பொருள்:

புனிதமான தாமரையில் அமர்ந்தவளே! கருடவாகனன் போற்றும் தேவி! பத்மாசனத்தில் அமரப்வளே! வைஷ்ணவியாய் விளங்கி எம் அல்லல்கள் அகற்று தாயே1செல்வம் அருள்பவள், அனைத்தும் நீயாய் விளங்குபவள். பரந்தாமன் மேல் பற்று கொண்டவளே! கண்ணைன் திரு மார்பில் உறைபவளே! தங்களை வணங்குகிறேன். மகாலக்ஷ்மியைப் போற்றும் துதி இது.

(இத்துதியை வரட்சுமி நோன்பு தினத்தன்று (24.8.2018) ஆரம்பித்து, தினமும் மாலை வேலைகளில் பாராயணம் செய்து வந்தால் திருமகளின் கடைக்கண் பார்வை நம்மீது பட்டு  நம் வாழ்வில் லக்ஷ்மி கடாட்சம் கிட்டும்.)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bathnatural

    சர்வதேச இயற்கை மருத்துவத் தினத்தை முன்னிட்டு மணல் குளியல் விழிப்புணர்வு

  • puegovolconoerupt

    கவுதமாலாவில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியது : 4,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம்

  • delhiproblem

    டெல்லியில் நிலவும் பனிப்புகை மூட்டத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி

  • colombiacarfestival

    கொலம்பியாவில் 29வது கார் திருவிழா : தானியங்கி வாகங்களில் மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு

  • vietnamramnathgovind

    வியட்நாமில் தேசிய சபை தலைவர் நிகுயென் தி கிம் நிகானுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்