SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆவணி மாதத்தில் என்னென்ன விசேஷங்கள்?

2018-08-16@ 15:34:15

ஆவணி 1, ஆகஸ்ட் 17, வெள்ளி  

சஷ்டி. விஷ்ணுபதி புண்யகாலம். சங்கரன்கோயில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் புறப்பாடு. திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை. ஸ்ரீ வில்லிப்புத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு. திருவேற்காடு கருமாரியம்மனுக்கு மாலை 6 மணிக்கு சந்தனக் காப்பு.

ஆவணி 2, ஆகஸ்ட் 18, சனி  

சப்தமி. திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு ஆராதனை. திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு. ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு,

ஆவணி 3, ஆகஸ்ட் 19, ஞாயிறு  

அஷ்டமி. குலச்சிறையார் ஆராதனை. மதுரை சோமசுந்தரர், உலவாய்க்கோட்டை அருளிய திருவிளையாடல். திருவல்லிக்கேணி குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. திருவேற்காடு கருமாரியம்மன் இரவு 8 மணிக்கு மஹிஷாசுரமர்த்தனி திருக்கோலத்தில் சிம்ம வாகனத்தில் திருவீதியுலா.

ஆவணி 4. ஆகஸ்ட் 20, திங்கள்  

நவமி. திருமலைதிருப்பதி பவித்ர உற்சவாரம்பம். மதுரை சோமசுந்தரர் பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை. ரிஷாபாரூட தரிசனம். விருதுநகர் சுவாமி அம்பாள் ரிஷபசேவை. அஹோபிலமடம் ஸ்ரீமத் 2 வது பட்டம் ஸ்ரீஅழகியசிங்கர் திருநட்சத்திரம்.

ஆவணி 5. ஆகஸ்ட் 21, செவ்வாய்  


தசமி. குங்கிலியக் கலயனார் ஆராதனை. மதுரை ஆவணி மூலம்  பிட்டு உற்சவம். அக்கரைவட்டம் ஸ்ரீசித்தானந்த ஸ்வாமிகள் குருபூஜை. வேளூர் ஸ்ரீபஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, திருவையாறு சூரிய புஷ்கரணியில் தீர்த்தம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோயில் ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. மதுரை சோமசுந்தரர் வளையல் விற்ற காட்சி. இரவு ஸ்வாமி பட்டாபிஷேகம். ஸ்வாமி, அம்பாள் இருவரும் தங்கப் பல்லக்கில் பவனி. திருவேற்காடு கருமாரியம்மனுக்கு காலை 5 மணிக்கு 108 சங்காபிஷேகம். தங்கக் கவசம்.

ஆவணி 6. ஆகஸ்ட் 22, புதன்  

ஸர்வ ஏகாதசி. மதுரை திருமோகூர் காளமேகப் பெருமாள் புறப்பாடு. வாஸ்து நாள்.(நல்ல நேரம் மாலை 3.10  3.54) ஸ்ரீரங்கம் பவித்ர உற்சவ ஆரம்பம், பக்ரீத் பண்டிகை.

ஆவணி 7. ஆகஸ்ட் 23, வியாழன்  

திரயோதசி. மகாபிரதோஷம். திருமலைதிருப்பதி பவித்ர உற்சவ முடிவு, திருப்பதி திருவேங்கடமுடையான் கத்வால் சம்ஸ்தான மண்டபத்திற்கு எழுந்தருளல். சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

ஆவணி 8. ஆகஸ்ட் 24, வெள்ளி  

சதுர்த்தசி. நடராஜர் அபிஷேகம் (மாலையில்). ஓணம் பண்டிகை. திருவோண விரதம். வரலட்சுமி விரதம். சித்தர்காடு ஸ்ரீ சிற்றம்பல விநாயகர் ஸம்வத்சராபிஷேகம். சங்கரன் கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் வேதவல்லித்தாயாருக்கு திருமஞ்சன சேவை, திருவேற்காடு கருமாரியம்மனுக்கு காலை 5 மணிக்கு அபிஷேகம். அனுமாருக்கு வடைமாலை.

ஆவணி 9. ஆகஸ்ட் 25, சனி  

சதுர்த்தசி. பெளர்ணமி. ரிக் உபா கர்மா. கும்பகோணம் ஸ்ரீராமர் பவித்ர உற்சவ கருட சேவை, திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் மாலை 4.02  முதல் 2682018 மாலை 545 வரை. திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள்.

ஆவணி 10. ஆகஸ்ட் 26, ஞாயிறு  

பிரதமை. ஆவணி அவிட்டம்  யஜுர் உபாகர்மா. திருவேடகம் ஏடகநாத சுவாமி திருப்பாசுர ஏடு எதிர் ஏறிய லீலை. திருவள்ளூர் பவித்ர உற்சவாரம்பம். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ரிஷபாரூட தரிசனம். கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப்பெருமாளுக்கு புஷ்ப அலங்காரம்.

ஆவணி 11, ஆகஸ்ட் 27, திங்கள்  

துவிதியை. காயத்ரி ஜபம். சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம்.

ஆவணி 12, ஆகஸ்ட் 28, செவ்வாய்  


திரிதியை. சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.

ஆவணி 13. ஆகஸ்ட் 29, புதன்  

மகா சங்கடஹர சதுர்த்தி. திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில்  நரசிம்மர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை,

ஆவணி 14. ஆகஸ்ட் 30, வியாழன்  

பஞ்சமி. திண்டுக்கல் சத்குரு சாது ஸ்ரீகருணாம்பிகை அம்மையார் குருபூஜை. திருச்செந்தூர், பெருவயல் தலங்களில் கொடியேற்றம். உற்சவாரம்பம்.

ஆவணி 15. ஆகஸ்ட் 31, வெள்ளி  


சஷ்டி. திருச்செந்தூர் முருகப்பெருமான் சிங்கக் கேடயச் சப்பரத்தில் பவனி. கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்குத் திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை. மாடவீதிப் புறப்பாடு.

ஆவணி 16. செப்டம்பர் 1, சனி  

சப்தமி. கோகுலாஷ்டமி. திருப்போரூர் முருகப்பெருமான் அபிஷேகம். பெருவயல் முருகப்பெருமான் புறப்பாடு.

ஆவணி 17. செப்டம்பர் 2, ஞாயிறு  

நவமி. வைகானஸ முனித்ரய ஸ்ரீஜெயந்தி. பாஞ்சராத்ர ஜெயந்தி. கார்த்திகை விரதம்.

ஆவணி 18, செப்டம்பர் 3, திங்கள்  

நவமி, தசமி. திதித்வயம். பாஞ்சராத்ர ஸ்ரீஜெயந்தி. கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சந்நதியில் கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.

ஆவணி 19, செப்டம்பர் 4, செவ்வாய்  

தசமி. ஸ்ரீரங்கம், மன்னார்குடி, திருவள்ளூர் தலங்களில் உறியடி உற்சவம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோயில் ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

ஆவணி 20. செப்டம்பர் 5, புதன்  

ஏகாதசி. திருச்செந்தூர் ஷண்முகர் சிவப்பு சாத்தி தரிசனம்.

ஆவணி 21. செப்டம்பர் 6, வியாழன்  


ஸர்வ ஏகாதசி. ஸ்ரீரங்கம் நம் பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்காரத் திருமஞ்சன சேவை. வேளூர் ஸ்ரீவினைதீர்த்த விநாயகர் உற்சவாரம்பம். திருச்செந்தூர் ஷண்முகர் பச்சை சாத்தி தரிசனம். கும்பகோணம் ஸ்ரீராமர் திருக்கல்யாணம்.

ஆவணி 22, செப்டம்பர் 7, வெள்ளி  

துவாதசி. திரயோதசி. பிரதோஷம். செருத்துணையார் ஆராதனை. திருச்செந்தூர் முருகப்பெருமான் காலை தங்கக் கைலாச பர்வத வாகனத்தில் திருவீதியுலா. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கமல வாகனத்தில் புறப்பாடு.

ஆவணி 23, செப்டம்பர் 8, சனி  

சதுர்த்தசி. மாத சிவராத்திரி. புகழ்த் துணையார், இளையான்குடி மாறனார், அதிபத்தர் ஆராதனைகள். திருச்செந்தூர் திருத்தேர். காட்டு மன்னார்குடி அடுத்த மோகூர் உறியடி. மதுரை நவநீதகிருஷ்ணஸ்வாமி  ராமாவதார திருக்கோலம். மாலை தவழ்ந்த கண்ணன் அலங்காரம். யானை வாகனத்தில் திருவீதியுலா.

ஆவணி 24, செப்டம்பர் 9, ஞாயிறு  


ஸர்வ அமாவாசை. தர்ப்ப ஸங்கிரஹம். அழகர் கோயில் 6வது படைவீடு அழகர்மலை வருஷாபிஷேகம். திருப்பனந்தாள் பொய்கைக் குளத்தில் ஸ்ரீபிரம்மனுக்கு சாபம் நீக்கி அருளியது. மதுரை நவநீத கிருஷ்ணர் ஆண்டாள் திருக்கோலம். திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள், விபீஷணனுக்கு நடையழகு காண்பித்தல்.

ஆவணி 25, செப்டம்பர் 10, திங்கள்
 

பிரதமை. மறைஞான சம்பந்தர் ஆராதனை. சாந்த்ரமான பாத்ரபத மாஸம் ஆரம்பம். திருவாரூர் மடப்புரம் ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள் குருபூஜை. அஹோபில மடம் 44ம் பட்டம் திருநக்ஷத்திரம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோயில் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. உப்பூர்
ஸ்ரீவிநாயகப் பெருமான் காமதேனு வாகனத்தில் பவனி.

ஆவணி 26, செப்டம்பர் 11, செவ்வாய்

துவிதியை. சந்திர தரிசனம். சாம உபாகர்மா. கல்கி ஜெயந்தி. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் குதிரை வாகனத்தில் திருவீதியுலா.

ஆவணி 27, செப்டம்பர் 12, புதன்


திருதியை. ஹரிதாளிகா கெளரி விரதம். விபத்தார கெளரி விரதம். திருவள்ளூர் வேதாந்த தேசிகர் உற்சவாரம்பம். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்  மாலை திருத்தேரில் திருவீதியுலா. மதுரை நவநீத கிருஷ்ணர் காலை ராஜ அலங்காரம். இரவு புஷ்பக விமானத்தில் ராமாவதாரக் காட்சி.

ஆவணி 28, செப்டம்பர் 13, வியாழன்


விநாயகர் சதுர்த்தி. வேளூர் ஸ்ரீவினைதீர்த்த விநாயகர் உற்சவ பூர்த்தி. திருமலைதிருப்பதி, சென்னை பைராகி மடம் பிரம்மோற்சவாரம்பம். திருவலஞ்சுழி ஸ்ரீஸ்வேத விநாயகர் ரதோற்சவம். திருநெல்வேலி நெல்லையப்பர் சப்பரத்தில், மகாவிஷ்ணு திருக்கோல தரிசனம்.

ஆவணி 29, செப்டம்பர் 14, வெள்ளி
 

ரிஷி பஞ்சமி. மஹாலக்ஷ்மி விரதம். மதுராந்தகம் பாஷ்யகாரர் பஞ்ச சம்ஸ்கார உற்சவம். தல்லாகுளம் ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப்பெருமாள் கிருஷ்ணாவதார திருக்கோலம்.

ஆவணி 30, செப்டம்பர் 15, சனி  

சஷ்டி. சஷ்டி விரதம். குலச்சிறையார். தல்லாகுளம் ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ராமாவதார திருக்கோலம். ஒப்பிலியப்பன் கோயில் ஸ்ரீநிவாசப் பெருமாள் காலை வெள்ளிப் பல்லக்கில் திருவீதியுலா.

ஆவணி 31, செப்டம்பர் 16. ஞாயிறு
 

பாதூர் கருடன். வலங்கைமான் மகாமாரியம்மன் தெப்பம். நெல்லுச்சேரியில் சூரிய பூஜை ஆவணி 31 முதல் புரட்டாசி 2 வரை. ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் சேஷ வாகனத்தில் பவனி. திருப்பதி ஏழுமலையப்பன் காலை கற்பகவிருக்ஷ வாகனத்திலும் இரவு ஸர்வ பூபாள வாகனத்திலும் திருவீதியுலா.

தொகுப்பு: ந.பரணிகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-10-2019

  20-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 19-10-2019

  19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • boniaredlady

  தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

 • chisa

  தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

 • karvachauth_2019

  கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்