SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் ஆடிப்பூர விழா

2018-08-10@ 14:33:04

மன்னார்குடி: மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு சுவாமி தங்க கருட வாகனத்திலும், தாயார்  வெள்ளி சிம்ம வாகனத்திலும் எழுந்தருளினர். மன்னார்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ தலமான  ராஜகோபால சுவாமி கோயிலில்  ஆடிப்பூர விழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து தினந்தோறும் ராஜகோபால சுவாமியும், செங்கமல தாயாரும்  பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். இதன்படி ஆடிப்பூர 4ம் நாள் விழாவில் ராஜகோபால சுவாமி  தங்க  கருட வாகனத்திலும், செங்கமல தாயார் வெள்ளி சிம்ம  வாகனத்திலும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ராஜகோபால சுவாமி மற்றும்  செங்கமலத் தாயார் ஆகியோரை தரிசித்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-08-2018

    15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்