SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

காளையார்கோவிலில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் மது எடுப்பு திருவிழா

2018-08-10@ 14:32:26

காளையார்கோவில்: காளையார்கோவில் கஸ்தூரிபாய் தெருவில் உள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயிலில் மதுக்குடம் எடுப்பு விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் கஸ்தூரிபாய் தெருவிலுள்ள ஸ்ரீமுத்துமாரி அம்மன் கோயில் 59ம் ஆண்டு மதுஎடுப்பு விழா ஜூலை 31ம் தேதி காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 8 நாள் நிகழ்ச்சியாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. ஆக. 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 220க்கும் மேற்பட்டோர் பால் குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பின்னர் அன்னதானம் நடைபெற்றது.

நேற்று காலை 9 மணிக்கு மேல் 400க்கும் மேற்பட்டோர் புனிதநீர், வேப்பஇலை, தென்னம்பாலை கலந்த மதுகுடம் எடுத்து முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வாள்மேல் நடந்த அம்மன் கோவிலுக்குச் சென்று விசேஷ பூஜைகள் செய்து நிறைவு செய்தனர். பிற்பகலில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இவ்விழாவினை விழாக் கமிட்டி மற்றும் கஸ்தூரிபாய் தெரு பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். மதுக்குடம் தூக்கிய பக்தர்களுக்கு இளைஞர் மன்றம் சார்பாக மரக்கன்றுகள் வழங்கினார்கள்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-03-2019

    19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mylai_kabal1

    பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

  • parade_eye1

    புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

  • newattack

    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

  • siva_muthu12

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்