SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சோலைமலை முருகன் கோயிலுக்கு 108 காவடி எடுத்து வந்த இலுப்பூர் பக்தர்கள்

2018-08-10@ 14:28:46

அலங்காநல்லூர்: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரிலிருந்து திருமுருகன் வாரவழிபாடு சபையின் சார்பாக 108 முருகபக்தர்கள் மயில்காவடிகளுடன் பாதயாத்திரையாக புறப்பட்டு ஆறாவதுபடைவீடான சோலைமலை முருகன் கோயிலுக்கு வந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரிலிருந்து திருமுருகன் வாரவழிபாடு சபையைச் சேர்ந்த 108 முருகபக்தர்கள் மயில்காவடிகளுடன் பாதயாத்திரையாக புறப்பட்டனர். கொன்னையூர், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மதுரை மாவட்டம் மேலூர், கிடாரிபட்டி வழியாக 130 கி.மீ தூரம் பாதயாத்திரையாக அழகர்மலை உச்சியில் உள்ள முருகபெருமானின் ஆறாவதுபடை வீடான சோலைமலை முருகன் கோயிலுக்கு வந்தடைந்தனர்.

அங்கு கோயில் 4 பிரகாரங்களிலும் மேளதாளம் முழங்க காவி ஆடைகள் அணிந்தவாறு பக்தர்கள் காவடியுடன், ஆடிப்பாடி மூலவர் சன்னதி முன்பாக வந்து சேர்ந்தனர்.அங்கு சுவாமிக்கு திருஆபரணங்கள் சாத்தப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சஷ்டி மண்டபத்தில் உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பழம், பன்னீர், தேன், புஷ்பம், இளநீர், விபுதி, சந்தனம், உள்ளிட்ட 36 வகையான அபிஷேகங்கள் நடந்தது.

பின்னர் சர்வ அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளினார்.ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.அவர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் மாலையில் தங்கத்தேர் பக்தர்களால் இழுக்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை வழிபாடு சபையின் தலைவர் பொன்.முத்துவிநாயகம், பொருளாளர் டி.ஏ.சேகரன் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். முன்னதாக பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்த முருக பக்தர்களை தக்கார் வெங்கடாசலம் ஆலோசனையின் பேரில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் வரவேற்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்