SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆடித்திருவிழாவையொட்டி அம்மன் கோயில்களில் தீ மிதித்த பக்தர்கள்

2018-08-10@ 14:28:15

இடைப்பாடி: ஆடித்திருவிழாவையொட்டி இடைப்பாடியில் உள்ள அம்மன் கோயில்களில் தீ மிதி விழா நடந்தது. இடைப்பாடி அருகே, மேட்டுத்தெரு, க.புதூர், ஆகிய பகுதிகளில் உள்ள மாரியம்மன், காளியம்மன் கோயில்களில் கடந்த வாரம் ஆடிப்பண்டிகை பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் வழிபட்டனர். இதில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தீமிதி விழா நேற்று காலை கோயில் முன் தொடங்கியது. கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில், கரகத்துக்காரர் மற்றும் காணியாச்சி காரர்கள் முதலில் குண்டம் இறங்கினர். இதை தொடர்ந்து பக்தர்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் குழந்தைகள் என பலர் வரிசையாக குண்டம் இறங்கி தீ மிதித்தனர்.

மேலும் எலுமிச்சை அலகு, வாய் அலகு குத்தியபடியும், ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்தும், ஆடு, கோழி என பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்திருந்ததால் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இடைப்பாடி இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் வெள்ளாண்டி வலசு, பழையபேட்டை, புதுப்பேட்டை, சின்னமணலி உள்ளிட்ட அனைத்து கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. அதே போல் இடைப்பாடி அருகே ஆலச்சாம்பாளையத்தில் உள்ள மகா மாரியம்மன் கோயிலில் நேற்று, திரளான பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • malar_modi12

    2வது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடி ; கட்சித் தலைவர்கள் மோடிக்கு மலர் கொத்துக்களுடன் வாழ்த்து

  • peruearthqq1

    பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் சுமார் 8 ஆக பதிவு

  • Trump_japan11

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பயணம் : ஜப்பான் பிரதமருடன் கோல்ஃப் விளையாடி அசத்தல்

  • kashmir_kola11

    தீவிரவாதி ஜாகீர் முசா கொல்லப்பட்டதன் எதிரொலி : காஷ்மீரில் வன்முறை வெடிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்

  • 20aacident_died11

    சூரத்தில் கல்வி பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து: 20 பேர் பரிதாப பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்