SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

தச்சமொழி முத்துமாரியம்மன் கோயில் ஆடிக்கொடை விழாவில் பால்குடம் ஊர்வலம்

2018-08-10@ 14:27:37

சாத்தான்குளம்: சாத்தான்குளம்  தச்சமொழி முத்துமாரியம்மன் கோயிலில் ஆடிக்கொடை விழா கடந்த 5ம்தேதி துவங்கி  நேற்று வரை  5 நாட்கள் விமரிசையாக நடந்தது. முதல் நாளான 5ம்தேதி காலை உவரி சுயம்புலிங்கசுவாமி  கோயிலிலிகுந்து தீர்த்தம் எடுத்து வருதல், காலை 8 மணிக்கு சாத்தான்குளம்  அழகம்மன் கோயிலிருந்து தீர்த்தம் எடுத்து வருதல், நண்பகல் 12 மணிக்கு அலங்கார பூஜை, 1மணிக்கு அன்னதானம், இரவு 8மணிக்கு திருவிளக்கு பூஜை, நடந்தது. 2ம்  நாளான 6ம்தேதி நண்பகல் 12 மணிக்கு விநாயகர், முருகன், பெருமாள் மற்றும்  அம்மன்களுக்கு சிறப்பு பூஜை, இரவு 7 மணிக்கு அம்மன் கும்பம் எடுத்து வீதியுலா வருதல், 8 மணிக்கு மஞ்சள் பெட்டி எடுத்து பக்தர்கள் ஊர்வலம் இரவு இன்னிசை கச்சேரி,நடந்தது.

3ம்நாளான கடந்த 7ம் தேதி காலை 8.30 மணிக்கு யானை  முன்செல்ல அழகம்மன் கோயிலில் இருந்து பால்குடம் ஊர்வலம் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர். காலை 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, நண்பகல் 12மணிக்கு அம்மன்  மஞ்சள் நீராட்டு வைபவம் நடந்தது. இரவு 8மணிக்கு சிங்காரி மேளத்துடன் பக்தர்கள் அம்மனுக்கு  முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

இரவு 10மணிக்கு கரகாட்டமும், நள்ளிரவு முத்துமாரியம்மன் மின்னொளி அலங்காரத்தில் சிங்க வாகனத்தில் எழுந்தருளியதும் வீதியுலா நடந்தது. 4ம் நாளான  நேற்று முன்தினம் நண்பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, இரவு 7மணிக்கு அம்மன் தீச்சட்டி ஏந்தி ஊர்வலம் வருதல், இரவு 8மணிக்கு மாவிளக்கு பூஜை, 9மணிக்கு அம்மனுக்கு அலங்கார பூஜை, அம்மன் தீச்சட்டி ஏந்தி நகர்வலம் வருதல், இரவு 10மணிக்கு கலைநிகழ்ச்சி நடந்தது. நிறைவு நாளான நேற்று காலை 6மணிக்கு உணவு எடுத்தல், 7மணிக்கு பிரசாதம் வழங்குதல்  நடந்தது. திருவிழாவில் தச்சமொழி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் திரளாகப் பங்கேற்று அம்மனை வழிபட்டுச் சென்றனர். ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர். 

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-03-2019

    19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mylai_kabal1

    பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

  • parade_eye1

    புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

  • newattack

    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

  • siva_muthu12

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்