SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றம்

2018-08-10@ 14:27:03

மதுரை: மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று கோலாகலமாக துவங்கியது. ஆக. 21ல் சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழா பிரசித்தி பெற்றது. சுந்தரேஸ்வரர் நடத்திய திருவிளையாடல்களை விளக்கும் வகையில் இத்திருவிழா நடத்தப்படுகிறது. இவ்விழா மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. காலை 10.55 மணிக்கு மேல் மேளதாளங்கள் முழங்க சுவாமி சன்னதியில் அமைக்கப்பட்டுள்ள 62 அடி உயர கொடிமரத்தில் பட்டர்களால் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை நடந்தது. மீனாட்சி, சுந்தரேஸ்வரர் மற்றும் பிரியாவிடை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

நிகழ்ச்சியில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை ஆணையர் நடராஜன், பணியாளர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆக. 21ல் சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. தக்கார் கருமுத்து கண்ணன் கூறும்போது, ‘‘அம்மனுக்கு சித்திரை திருவிழா போல, ஆவணி மூலத்திருவிழா சுவாமிக்கு முக்கியமானது. தீ விபத்தில் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டபம் பகுதியில் தூண்களை நிறுவ, தமிழ்நாட்டில் உள்ள 14 கல்குவாரிகளில் சென்னை ஐஐடியினர் கற்களை ஆய்வு செய்தனர். இதில் ராசிபுரத்தில் உள்ள கற்கள் தான் தரமாக உள்ளது. அதனை பணிக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்சம் கன அடிக்கு கற்கள் கேட்டுள்ளோம். 2 ஆண்டுகளில் சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடையும்,’’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்