SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏர்வாடி தர்ஹாவில் சந்தனக்கூடு விழா கோலாகலம் : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

2018-08-07@ 15:36:41

கீழக்கரை: ஏர்வாடி தர்ஹாவில் நடந்த சந்தனக்கூடு திருவிழாவில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் மகான் சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா தர்கா உள்ளது. இங்கு 844வது ஆண்டு உரூஸ் என்னும் சந்தனக்கூடு விழா கடந்த 24ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. விழாவில் நேற்று அதிகாலை 2 மணியளவில் தர்ஹா ஹக்தார் பொது மகாசபையினர் முன்னிலையில் ஏர்வாடி குடியிருப்பில் உள்ள முஜாபிர் நல்ல இபுராகிம் லெவ்வை மகாலில் இருந்து கரைத்த சந்தனத்தை வெள்ளி குடத்தில் வைத்து (ரதம்) சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக வந்தது. அதிகாலை 5 மணியளவில் தர்ஹாவை சந்தனக்கூடு ரதம் வந்தடைந்து. மகானின் மக்பிராவில் (சமாதியில்) சந்தனம் பூசப்பட்டது, இதில் அனைத்து சமுதாயத்தை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். ஆக. 12ல் மாலை 6.30 மணியளவில் கொடி இறக்கப்பட்டு ஆயிரக்கணக்கானவர்களுக்கு நெய் சோறு வழங்கப்படுகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-11-2018

    20-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thiruvan_5thdaycelb

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 5 ஆம் நாள்: விநாயகர், சந்தரசேகரர் மாட வீதியில் பவனி

  • rarephots_indiragandhi

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்கள்!

  • 2018_indiragandibirthdy

    இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 101 வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

  • america_winterstorm2018

    வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்