SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை!

2018-08-01@ 15:09:26

‘‘வானங்கள் இறைவனின் மாட்சியை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது. ஒவ்வொரு பகலும், அடுத்த  பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப்பற்றிய அறிவை வழங்குகின்றது. அவற்றுக்குச் சொல்லுமில்லை.  பேச்சுமில்லை. அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை. ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது. அவை கூறும் செய்தி உலகின்  கடையெல்லை வரை எட்டுகின்றது. இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார். மணவறையிலிருந்து புறப்படும் மணமகனைப்போல அது  வருகின்றது. பந்தயத்தில் ஓடும் வீரனைப்போல் அது தன்பாதையில் ஓடுகின்றது. அது வானத்தின் ஒரு முனையிலிருந்து புறப்படுகின்றது. அதன் பரந்த  மறுமுனை வரையிலும் செல்கின்றது. அதன் வெப்பத்திற்கு மறைவானது ஒன்றுமில்லை.

ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது. அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது. எளியவருக்கு அது ஞானம் அளிக்கிறது.  ஆண்டவரின் நியமங்கள் சரியானவை. அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை. அவை கண்களை ஒளிர்விக்கின்றன.’’   (திருப்பாடல்கள் 19:18) நிலவு வெளிச்சத்தில் ஒரு மனிதன் நடந்து கொண்டிருந்தான். வழியில் இருந்த கிணற்றின் அருகில் போய் உள்ளே எட்டிப் பார்த்தான்.  ஆழமான கிணறு, அதிகமாகத் தண்ணீர். கிணற்று நீரில் நிலவு தெரிந்தது. ஐயோ பாவம்! ஆகாயத்திலே இருந்த நிலவு கிணற்றுக்குள் அநியாயமாக விழுந்து  விட்டதே என்று பரிதாபப்பட்டான். நான் உன்னை எப்படியாவது காப்பாற்றுகிறேன், கவலைப்படாதே என்றான். ஊருக்குள் ஓடி ஒரு நீளமான கயிற்றைக்  கொண்டுவந்து அதைக் கிணற்றுக்குள் விட்டான். இந்தக் கயிற்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்.

உன்னை வெளியே கொண்டுவந்து விடுகிறேன் என்று உள்ளே தெரிந்த நிலவைப் பார்த்து உரக்கக் கூவினான். உள்ளே விட்ட கயிற்றை இழுத்துப் பார்த்தான்.  உள்ளே ஒரு கல் இடுக்கில் அது சிக்கிக் கொண்டதால் இழுக்க முடியவில்லை. ஆஹா! நிலவு கயிற்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது என்று நினைத்துக்  கொண்டான். இறுக்கமாகப் பிடித்துக் கொள் என்று கூறிக்கொண்டே நீளமான கயிற்றின் மறுமுனையை இடுப்பில் சுற்றிக் கொண்டான். இப்போது கயிற்றைப்  பலமாக இழுத்தான். கல்லில் சிக்கியிருந்த கயிறு திடீரென்று விடுபட்டு அவன் மல்லாக்காக விழுந்தான்.

ஆகாயத்தில் பார்த்தான். அங்கே நிலவு தெரிந்தது. அதைப் பார்த்துச் சொன்னான். நல்ல வேளை! சரியான நேரத்தில் நான் வந்து உன்னைக் காப்பாற்றினேன்.  இல்லையென்றால் உன் கதி என்ன ஆகியிருக்கும்? நினைத்துப்பார்...! இன்றைய மனிதர்கள் இப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ‘‘எல்லாம்  தன்னால்தான் நடக்கிறது’’ என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இவர்கள் இல்லாமலே எல்லாம் நடந்து கொண்டு இருக்கிறது. அகந்தை இருக்கிற  வரையில் ஆண்டவனை நெருங்க முடியாது என்கிறார்கள் பெரியோர்கள்! உண்மைதான்! ‘‘கர்வம் உள்ளவன் கடவுளை இழக்கிறான்; பொறாமை உள்ளவன்  நண்பனை இழக்கிறான், கோபம் உள்ளவன் தன்னையே இழக்கிறான்.’’

‘‘மணவைப்பிரியன்’’ ஜெயதாஸ் பெர்னாண்டோ

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-06-2019

  19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • bji

  முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

 • suvami

  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

 • mango

  கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

 • earth

  சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்