SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

சோழவித்யாபுரத்தில் சந்தனமாதா ஆலய பெரிய தேர் பவனி

2018-07-31@ 14:57:15

நாகை: நாகை மாவட்டம் திருப்பூண்டி அடுத்த சோழவித்யாபுரத்தில் தூய சந்தன மாதா ஆலயத்தில் ஆண்டு திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கியத்திருவிழாவான பெரிய தேர் பவனி  நடைபெற்றது. மிக்கேல், சம்மனசு, செபஸ்தியார், அந்தோணியார், சூசையப்பர், புனித சந்தன மாதா ஆகிய 5 சொரூபங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் புனிதம் செய்யப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாக முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

முன்னதாக வேளாங்கன்னி தூய ஆரோக்கிய மாதா பேராலய அதிபர் பிரபாகரன் அடிகளார் தலைமையில் நவநாள் ஜெபம், ஜெபமாலை, சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தேர்திருவிழாவை அடுத்து வண்ணமிகு வாணவேடிக்கை நடைபெற்றது. விழாவில், பங்குதந்தை சவரிமுத்து அடிகளார், பேராலய உதவி பங்குத்தந்தை டேவிட் தன்ராஜ் அடிகளார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவில் சோழவித்யாபுரம் கிராமத்தை சுற்றிலும் உள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சந்தன மாதாவின் திருவருளை பெற்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

  • venkhaiahnaidu

    செர்பியா, ரோமானியா நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்