SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வரதராஜர் தரிசனம் : ட்வென்ட்டி 20

2013-12-11@ 16:00:48

அரியலூர்- கல்லங்குறிச்சியில் கலியுக வரதராஜராகப் பெருமாள் தரிசனம் தருகிறார். கருவறையில் 12 அடி உயர கம்பத்தை  அனுமன் தாங்கிக் கொண்டிருக்கும் திருவுருவே உள்ளது.  

கடலூர்- நல்லாத்தூரில் வரதராஜப் பெருமாளுக்கு எதிரே உள்ள கருடாழ்வாரின் உடலில் எட்டு நாகங்கள் உள்ளன. சுவாதி நட்சத் திரத்தன்று இவருக்கு திருமஞ்சனம் செய்து 8 முறை வலம் வந்தால் கல்வி, செல்வம் விருத்தியாகும்.

சிதம்பரம்- எண்ணா நகரம் போஸ்ட், கீரப்பாளையம் வழியே உள்ள கண்ணங்குடியில் வரம் தரும் ராஜர் திருக்கோயில் கொண்டு ள்ளார். ஹஸ்த நட்சத்திரக்காரர்களின் பரிகாரத் தலமிது.

சூளகிரியில், அர்ஜுனன் பிரதிஷ்டை செய்த ஆலயத்தில் எல்லாமே ஏழு மயம் - ஏழுமலை, ஏழுகோட்டை, ஏழு மகாதுவாரங்கள்,  ஏழடி உயர வரதராஜப் பெருமாள்!

கோவை-உக்கடத்தில் கரிவரதராஜப் பெருமாளாக திருமால் அருள்கிறார். இத்தல ஹயக்ரீவர் கல்வி வரம் அருள்பவராக வணங்கப்படுகிறார்.

கோவை-கொழுமத்தில் கல்யாண வரதராஜப் பெருமாளை தரிசிக்கலாம். தாயார், வேதவல்லிக்கு வில்வ தளங்களால் அர்ச்சனை நடைபெறுகிறது.

சென்னை-பூந்தமல்லியில் புஷ்பவல்லி தாயாருடன் வரதராஜரை கண்டு மகிழலாம். இவர் தலையின் பின்னே சூரியனுடன் உள்ளதால், இத்தலம் சூரியதோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது.

கல்யாண வரதராஜரை தரிசிக்க சென்னை காலடிப்பேட்டைக்குச் செல்லவேண்டும். இங்கே தாமரை வடிவ பீடத்தில் நவகிரகங்கள் அருள்கின்றன.

சேலம் -ஆறகழூரில் கரிவரதராஜப் பெருமாளை தரிசிக்கலாம். தாயார் கமலவல்லி 64 கலைகளும் சித்திரமாக தீட்டப்பட்ட அலங்கார மஞ்சத்தில் அமர்ந்திருக்கிறார்.  தசாவதார சுதைச் சிற்பங்களில் புத்தரும் இடம்பெற்றுள்ளார்.

பாபநாசம்-அய்யம்பேட்டை, பசுபதிகோயிலில் பெரிய நம்பிக்கு பார்வையை மீட்டுத் தந்த வரதராஜப் பெருமாளை தரிசிக்கலாம். கேட்டை நட்சத்திரக்காரர்களின் பரிகாரத்தலம்.

திருநெல்வேலி -அத்தாளநல்லூரில் யானையைக் காத்த கஜேந்திரவரதர் அருள்கிறார். இவருக்கு சுத்தான்னம் நிவேதிக்கப்படுகிறது.

நெல்லையில், கிருஷ்ணபரமராஜன் எனும் அரசனான தன் பக்தனை எதிரியிடமிருந்து காக்க அந்த அரசனைப் போலவே வேடம் தாங்கி போரிட்டு  காத்த பெருமாள் வரதராஜராகத் திகழ்கிறார். நீலக் கல்லினாலான மூர்த்தி.

திருநெல்வேலியில் அருளும் சங்காணி வரதராஜப் பெருமாளின் வலக்கரத்தில் தன ஆகர்ஷண ரேகை உள்ளதால் பொன்னை இவர்  கரத்தில் வைத்து பக்தர்கள் நேர்ந்து கொள்கின்றனர்.

திருவாரூர், திருத்துறைப்பூண்டியில் அபீஷ்ட வரதராஜரை தரிசிக்கலாம். இத்தல விஸ்வரூப வைராக்கிய ஆஞ்சநேயருக்கு மட்டைத்  தேங்காய் கட்டி பிரார்த்தனை செய்கிறார்கள்.

திருவண்ணாமலை, வந்தவாசி அருகே நல்லூரில் சேவை சாதிக்கும் சுந்தரவரதராஜப் பெருமாள் காலடியில், வணங்கியபடி காணப்படும் கருடாழ்வார்,  (பக்தர்களின் கோரிக்கைகளை பெருமாளிடம் எடுத்துரைப்பதால்) இவர் பரிந்துரைக்கும் கருடாழ்வார் எனப்படுகிறார்.

தேனி,பெரியகுளத்தில் திருப்பதி பெருமாளைப் போன்றே காட்சியளிக்கிறார் வரதராஜர். கருவறையின் முன்னே தீபஸ்தம்பத்தின் அடியில் பிறந்த கு ழந்தைகளை வைத்து பழங்களை பெருமாளுக்கு நிவேதிக்க குழந்தையின் வாழ்வு வளம் பெறுவதாக நம்பிக்கை.

விழுப்புரம்-கச்சிராயப்பாளையத்தில் வரதராஜப் பெருமாள் ஆலயம் கொண்டருள்கிறார். யானைக் குகை எனும் ஒரு சுரங்கக் குன்று இங்கே உள்ளது.  ராஜகோபுரம் இல்லாத ஆலயம் இது.  

காஞ்சிபுரம் வரதராஜர், தேவராஜர் என்றும் வணங்கப்படுகிறார். 40 வருடங்களுக்கு ஒருமுறை தரிசனமளிக்கும் அத்திவரதரும்  தோஷங்கள் போக்கும் தங்க பல்லி, வெள்ளி பல்லியும் புகழ் பெற்றவை. வெள்ளையரான ராபர்ட் க்ளைவ் மற்றும் ப்ளேஸ் இருவரும் சமர்ப்பித்த  நகைகள் திருவிழா காலங்களில் பெருமாளுக்கு அணிவிக்கப்படுகின்றன.

திருத்தணி அருகே அருங்குளத்தில் கல்யாண வரதரை தரிசிக்கலாம். இங்கு பெருமாளுக்கு வில்வதளங்களால் அர்ச்சனை  செய்யப்படுகிறது.

கோவை-விக்னேஷ் நகரில் வரதராஜப் பெருமாளை தரிசிக்கலாம். உற்சவர், வடிவழகிய நம்பி. மகாலட்சுமி வாசம் செய்வதாக கூறப்படும் வில்வமரம் இங்கு தலவிருட்சம். ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் இங்கு சத்யநாராயணபூஜை நடைபெறுகிறது.

-ந.பரணிகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-09-2019

  18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • guiness_sathana

  எவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..!

 • mexico_isai111

  இராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்!.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்

 • 17-09-2019

  17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • dragan_canadaa

  கனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்