SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய 4ம் திருவிழாவில் நற்கருணை பவனி

2018-07-30@ 15:40:56

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பனிமய மாதா பேராலயத் திருவிழாவில் 4ம் நாளான நேற்று நற்கருணை பவனி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். தூத்துக்குடி மாநகரில் கடற்கரையோரம் உள்ள உலக பிரசித்திபெற்ற தூய பனிமய மாதா  பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆலயத்திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. திருவிழா நாட்களில் தினமும்  பல்வேறு தரப்பினருக்கான  திருப்பலி, ஜெபமாலை, நற்கருணை ஆசீர் மற்றும் ஒவ்வொருவருக்கான சிறப்புத் திருப்பலி  நடந்து வருகிறது. 4ம் திருநாளையொட்டி நேற்று காலை 6.30 மணிக்கு இனிகோநகர் பங்கு மக்களுக்கான சிறப்பு திருப்பலி நடந்தது.

காலை 7.30 மணிக்கு புதுநன்மை பெறுவோருக்கான சிறப்பு புதுநன்மை திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான குழந்தைகளுக்கு கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் புதுநன்மை வழங்கினார். இதில்  சிறுவர், சிறுமிகள், அமலோற்பவ மாதா வாலிபர் சபையினர், புனித வின்சென்ட் தே  பால் சபையினர் என திரளானோர் பங்கேற்றனர். காலை 9 மணிக்கு ஆங்கிலத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் வெளிநாட்டினர் பலர் பங்கேற்றனர்.

காலை 10 மணிக்கு ஸ்டேட் பாங்க் காலனி பங்கு மக்களுக்கான திருப்பலி நடந்தது. தொடர்ந்து  தூத்துக்குடி வாழ் கேரள மக்கள் மற்றும் மலையாளத்தை தாய்  மொழியாக கொண்ட மக்களுக்காக மலையாளத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது.  மாலை துறைமுக பங்கு மக்களுக்காக சிறப்பு திருப்பலியும் அதனை தொடர்ந்து ஜெபமாலையும் நடந்தது. மாலை  6.15 மணிக்கு நற்கருணை பவனி நடந்தது. இதையொட்டி நற்கருணை பேழை அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் வைக்கப்பட்டு ஆலய வளாகம் மற்றும் முக்கிய  பகுதிகளில் பவனி ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இரவு பங்குத்தந்தை ராயப்பன் கிறிஸ்தவ வாழ்வின் மையம் நற்கருணை என்ற  தலைப்பில் மறையுரை வாசித்து நற்கருணை ஆசீர் வழங்கினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • rivermoon

    வடகிழக்கு அமெரிக்காவில் நிலவின் மேற்பரப்பை போல உறைந்து காணப்படும் ஆற்றின் நடுப்பகுதி!

  • ParadeREhearsalRepublicDay

    டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையின் கண்கவர் புகைப்படங்கள்

  • alanganalloor_kaalaigal11

    வீரத்துடன் சீறி பாயும் காளைகள்.. மெர்சல் காட்டும் காளையர்கள்... உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திருவிழா

  • NairobiHotelAttack

    மும்பை பாணியில் கென்யா ஓட்டலில் நடத்தப்பட்ட பயங்கர தாக்குதல்: இதுவரை 21 பேர் உயிரிழப்பு!

  • 17-01-2019

    17-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்