SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடலைப் பருப்பு டிலைட்

2018-07-26@ 15:16:46

என்னென்ன தேவை?

வேகவைத்து மசித்த கடலைப்பருப்பு - 200 கிராம்,
குங்குமப்பூ - 1 சிட்டிகை,
துருவிய வெல்லம் - 250 கிராம்,
நெய் - 100 கிராம்,
தேங்காய்த்துருவல் அல்லது கொப்பரை துருவல் - 4 டேபிள்ஸ்பூன்,
வறுத்த கசகசா - 1 டீஸ்பூன்,
வறுத்த முந்திரி, காய்ந்ததிராட்சை - 25 கிராம்,
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,
நெய்யில் வறுத்த கடலை மாவு - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் வெல்லம், தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டவும். மீண்டும் அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் மசித்த  கடலைப்பருப்பு சேர்த்து கிளறி நன்றாக சுருண்டு வரும்போது கடலை மாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றவும். பிறகு 1 டீஸ்பூன் நெய் சேர்த்து  கிளறி இறக்கவும். நான்ஸ்டிக் தவாவில் நெய் ஊற்றி தேங்காய்த்துருவல், ஏலக்காய்த்தூள், கரைத்த குங்குமப்பூ கலவை, முந்திரி, திராட்சை, கசகசா சேர்த்து கிளறி  கடலைப்பருப்பு கலவையில் கொட்டி கலந்து பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

  • kajarainhome

    புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்