SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தூத்துக்குடியில் தூய பனிமய மாதா பேராலய திருவிழா கொடி பவனி

2018-07-26@ 14:25:22

தூத்துக்குடி: தூத்துக்குடி  தூய பனிமய மாதா பேராலயத் திருவிழா  இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி நேற்று மாலை கொடி பவனி நடந்தது. உலக பிரசித்திபெற்ற  தூத்துக்குடி  தூய பனிமய மாதா பேராலய திருவிழா  ஆண்டுதோறும் வெகு சிறப்பாக  கொண்டாடப்பட்டு வருகிறது. 436வது ஆண்டு திருவிழா இன்று (26ம் ேததி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி நேற்று  மாலை 5  மணிக்கு  சிறப்பு திருப்பலி நடந்தது. மாலை 6 மணிக்கு  திருச்சிலுவை சிற்றாலயத்தில் இருந்து கொடி பவனி மற்றும் காணிக்கை பொருட்களை  ஏந்திச் சென்ற பேரணி நடந்தது.

ஆலய பங்குத்தந்தை லெரின் டி ரோஸ் ஜெபம்  செய்து கொடி பேரணிக்கு தலைமை வகித்தார். இதில் இறைமக்கள் காணிக்கை பொருட்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகளுக்குரிய  கல்விப் பொருட்களுடன் திரளாகப் பங்கேற்றனர். மாதா ஆலயத்தில் துவங்கிய இப்பேரணி திருச்சிலுவை ஆலயம், வி.இ. ரோடு  வழியாக மீண்டும் மாதா ஆலயத்தை வந்தடைந்தது. தொடர்ந்து இன்று  அதிகாலை  5 மணிக்கு முதல் திருப்பலியும், 6 மணிக்கு 2ம் திருப்பலியும், பின்னர் 7.30 மணிக்கு கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில்  கூட்டுத் திருப்பலியும், அதனைத் தொடர்ந்து கொடியேற்றமும் நடக்கிறது. இதில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் மற்றும் பல்வேறு ஆலயங்களை  சேர்ந்த பங்குத்தந்தைகள் பங்கேற்கின்றனர்.

நண்பகல் 12 மணிக்கு அன்னைக்கு  பொன்மகுடம் பங்கு தந்தை விக்டர் லோபா தலைமையில் அணிவிக்கப்படுகிறது. இளையோர் பணியகம் சார்பில் மாலை 5.30 மணிக்கு இளையோருக்கான திருப்பலி நடக்கிறது. திருவிழா ஆகஸ்ட் 6ம் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது. இதில் உள்ளூர் மற்றும் வெளிநாடுகள் என பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட இறைமக்கள், பொதுமக்கள் மத, இன  பாகுபாடின்றி பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. ஏற்பாடுகளை தூய பனிமய மாதா பேராலய பங்குத்தந்தை லெரின் டி ரோஸ் தலைமையில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். கொடியேற்றம் மற்றும் திருவிழாவையொட்டி எஸ்பி முரளி ராம்பா உத்தரவின்பேரில் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CaucaLandslide

    கொலம்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி..: மீட்பு பணிகள் தீவிரம்

  • BombBlastLanka19

    இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்பில் இதுவரை 290 பேர் உயிரிழப்பு: கொடூர நிகழ்வின் புகைப்படங்கள்

  • 22-04-2019

    22-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்