SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலய வரலாறு

2018-07-25@ 15:12:13

ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலய வரலாறு குறித்து பங்குத்தந்தை மரியவளன் கூறுகையில்      வயலோர வரப்புகளில் சாத்திவைக்கப்பட்டுள்ள மரக் கலப்பைகளை கூட துளிர்விட்டு தளிர்க்கச் செய்யும் ஆற்றல் பெற்ற வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றின் கடைசி அணைக்கட்டு ஸ்ரீவைகுண்டத்தில் அமைந்துள்ளது. அழகிற்கு அழகு சேர்ப்பது போல் ஸ்ரீவைகுண்டத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக குருகோவில் என்றழைக்கப்படும் புனித சந்தியாகப்பர் ஆலயம் அமைந்துள்ளது மும்மதத்தினரும் வாழந்தாலும் மதத்தின் பெயரால் பிரிவினை இன்றி ஒற்றுமையுடன் வாழும் ஸ்ரீவைகுண்டம் பகுதி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் திருவிழா குருசுகோவில் என்றழைக்கப்படும் புனித சந்தியாகப்பர் திருவிழாவாகும். இத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 16ம் தேதி கொடியேற்றப்பட்டு ஜூலை 25 வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

இத்திருவிழாவில் பங்கேற்க கடலோர பகுதி மக்கள் திரளாக வந்து திருவிழா நடைபெறும் 10 தினங்களும் கோவில் வளாகத்திலேயே குடிசைகள் அமைத்து தங்கி புனித சந்தியாகப்பரை வழிப்பட்டு செல்வார்கள். இத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக ஜூலை 25ம் தேதி காலையில் தேர்பவனி நடைபெறுவதையும் அன்றைய தினம் மாலையில் நடைபெறும் நிகழ்வுகளுக்கும் பங்கு மக்கள், கடற்கரைப் பகுதி மக்கள் மட்டும் இன்றி அனைத்து மதத்தினரும் திரளாக கலந்து கொள்வார்கள்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த புனித சந்தியாகப்பர் ஆலயத் திருவிழா இந்த ஆண்டு பவளவிழா ஆண்டாக கொண்டாடப்படுகிறது.

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர், ஞானத் தந்தை புனித சவேரியாருக்குப் பிறகு தமிழக கடலோரங்களில் பணியாற்ற வந்த இயேசு சபைக்குருக்கள் புன்னக்காயலைத் தலைமையிடமாக அமைத்து இருந்தனர். 1600ம் ஆண்டில் ஸ்ரீவைகுண்டத்தில் இயேசு சபைக்குருக்களா முதல் ஆலயம் எழுப்பப்பட்டது இந்த ஆலயம் சிலுவை அல்லது குருசு வடிவில் இருந்ததால் குருசு கோவில் என்று அழைக்கப்பட்டது.  பெரும்பாலானவர்கள் உலர் மீன் வியாபாரத்திற்காக கடலோரக் கிராமங்களிலிருந்து குடிபெயர்ந்து வந்த மீனவ மக்கள் என்று 1644ம் ஆண்டு இயேசு சபை அறிக்கையில் அருட்திரு ஆண்ட்ரு லோப்பஸ் அடிகளார் குறிப்பிடுகிறார்.

1814இல் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுவாமி லூயிஸ் துராங்கே திருத்தலத்தின் பொறுப்பேற்று அரும்பணிகள் செய்தார்.1843ல் காலரா நோயினால் பாதிக்கப்பட்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி தன்னுடைய 38 வயதில் மரணமடைந்தார். இவரது கல்லறை இன்றைக்கும் ஆலயத்தில் புனிதமாக போற்றப்படுகிறது.1938இல் டிசம்பர் மாதம் 31ம் நாள் சனிக்கிழமை ஸ்ரீவைகுண்டம் திருத்தலம் தனிப்பங்காகியது. முதல் பங்குத்தந்தையாக ஞானப்பிரகாசம் சுவாமிகள் நியமிக்கப்பட்டார். அவருக்குப்பின் வந்த சிங்கராயர் சுவாமிகள் 1942ல் புதிய ஆலயத்தை எழுப்பினார். இந்த ஸ்ரீவைகுண்டம் திருத்தலத்தில் 400 ஆண்டுகளுக்கும் மேலாக அருள் பொழிந்து வரும் சந்தியாகப்பர், பலரது வாழ்வில் வசந்தமும் வளர்ச்சியும் அளித்துள்ளார்.

மொழி, இனம்,மதம் கடந்து எல்லாருமே புனித சந்தியாகப்பரைத் தேடி வருவது அவர் தன்னை நாடி வரும் எல்லோருக்குமே இவர் பிரியமானவராக இருந்தாலும் கடலோரங்களில் வாழும் மீனவ மக்கள் சந்தியாகப்பர் மீதும், ஸ்ரீவைகுண்டம் திருத்தலத்தின் மீதும் அளவிட முடியாத பாசம் வைத்திருக்கின்றனர்.   விழாக்கால பத்து நாட்களும் புனிதர் அருகே தங்கி, தங்களது உயர்தர விசுவாசத்தை புதுப்பித்துக் கொள்கிறார்கள். கேட்டதை மனம் குளிர பெற்றுச் செல்கிறார்கள். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை மரியவளன் தலைமையில் அருட்சகோதரிகள், ஊர்நலக் கமிட்டியினர் மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-12-2018

  16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • lisbon_tramp11

  லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

 • 15-12-2018

  15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • AmazonIllegalMining

  அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

 • chinasnowfall

  கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்