SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

“என் அடியார்களே..!”

2018-07-24@ 15:10:19

உயர்வும் கண்ணியமும் நிறைந்த இறைவன் அறிவிப்பதாக அண்ணல் நபிகளார் சில செய்திகளைச் கூறினார்கள்.  இறைவன் கூறுகிறான்: “என் அடியார்களே..! அநீதி இழைப்பதை எனக்கு நானே தடை செய்து கொண்டுள்ளேன். அதை உங்களுக்கு மத்தியிலும் தடை செய்துள்ளேன். எனவே, நீங்கள் ஒருவர் மீது மற்றவர் அநீதி இழைக்காதீர்கள்.“என் அடியார்களே..! உங்களில் யாருக்கு நான் வழிகாட்டுதல் அளித்துள்ளேனோ அவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் வழி தவறியவர்களே. எனவே, என்னிடமே வழிகாட்டுதலைக் கேளுங்கள். நான் உங்களுக்கு வழிகாட்டுவேன்.“என் அடியார்களே..!உங்களில் யாருக்கு நான் உணவு அளித்துள்ளேனோ அவர்களைத் தவிர மற்ற அனைவரும் பசித்திருப்பவர்களே. எனவே என்னிடமே உணவைக் கேளுங்கள். நான் உங்களுக்கு உணவூட்டுவேன்.“என் அடியார்களே..!

உங்களில் யாருக்கு நான் ஆடை அணிவித்துள்ளேனோ அவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் நிர்வாணமானவர்களே. எனவே என்னிடமே ஆடையைக் கேளுங்கள். நான் உங்களுக்கு ஆடை அணிவிப்பேன்.“என் அடியார்களே..! நீங்கள் இரவும் பகலும் பாவங்களைச் செய்துகொண்டே இருக்கிறீர்கள். நான் உங்களுடைய பாவங்களை மன்னிக்கிறேன். எனவே என்னிடமே பாவ மன்னிப்புக் கோருங் கள். நான் உங்களுடைய பாவங்களை மன்னிப்பேன்.“என் அடியார்களே..! பாவம் செய்வதன் மூலமாக எனக்கு இழப்பை ஏற்படுத்த விரும்பினீர்கள் எனில், திண்ணமாக உங்களால் எனக்கு எவ்வித இழப்பையும் ஏற்படுத்தவே இயலாது.

நற்செயல்கள் மூலமாக எனக்கு நன்மை செய்ய விரும்பினீர்கள் எனில் திண்ணமாக உங்களால் எனக்கு எவ்வித நன்மையையும் செய்ய இயலாது. “என் அடியார்களே..! உங்களுக்கு முந்தைய காலங்களைச் சேர்ந்தவர்களும் உங்களுக்குப் பிந்தைய காலங்களைச் சேர்ந்தவர்களும் ஒட்டுமொத்த மனித குலத்தைச் சேர்ந்தவர்களும் ஜின்களும் ஒரே இடத்தில் ஒன்று திரண்டு, தத்தமது தேவைகளைக் கோரி பிரார்த்திக்க, ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் கேட்டதை எல்லாம் நான் கொடுத்தாலும் அதனால் என்னிடம் இருப்பதில் எதுவுமே குறைந்து விடாது. மிஞ்சிப் போனால் பெருங்கடலில் ஊசி ஒன்றைப் போடும்போது எந்த அளவுக்குக் குறையுமோ அந்த அளவுக்குக் குறையலாம்.” (ஆதாரம்முஸ்லிம்)

இந்த வார சிந்தனை

“மனிதர்களில் சிறந்தவர் பாவமன்னிப்புக் கோரி இறைவனின் பக்கம் மீள்பவர்தாம்.”  நபிமொழி

சிராஜுல்ஹஸன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்