SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெஜிடபிள் கட்லெட்

2018-07-23@ 16:30:59

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 7
குடைமிளகாய் - 1 (சிறு துண்டுகளாக நறுக்கியது)
கேரட்,பீட்ரூட்,பட்டாணி போன்ற விருப்பமான காய்கறிகள்  2 கப் (நன்றாக நறுக்கியது)
பிரட் கிரம்ஸ்  1 கப்
சோளமாவு/மைதா மாவு  2 அல்லது 3 ஸ்பூன்
எண்ணெய் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
சிறிதளவு சோம்பு (உடைத்தது.)

செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து தண்ணீர்விடாமல் கெட்டியாக மசித்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு போட்டு பின்னர் குடைமிளகாய், காய்கறிகளை அதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி முக்கால் பாகம் வேகும் வரை வைத்திருக்கவும். (தண்ணீர் சேர்க்கக் கூடாது) இந்த காய்கறிக் கலவையை மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்குடன் சேர்த்து நன்றாக பிசையவும். மிகவும் தளர இருந்தால் சிறிதளவு சோளமாவு சேர்த்துக் கொள்ளலாம்.

ஒரு அகலமான தட்டில் பிரட் கிரம்ஸ் கொட்டி பரவலாக வைக்கவும். மற்றொரு தட்டில் சிறிதளவு தண்ணீருடன் சோளமாவு/மைதாமாவு சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும். காய்கறிக் கலவையை சிறிய உருண்டைகளாக்கி தட்டி(வடைக்கு செய்வது போல் சற்று தடிமனாக) அதனை சோளமாவு கலவையில் புரட்டி பின்னர் பிரட் கிரம்ஸில் புரட்டி தனியாக வைக்கவும். எல்லா கலவையையும் இப்படி செய்து முடித்தபின் இந்த கட்லெட்டை அரைமணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்திருந்து எடுக்கவும். பின்னர் ஒரு தோசைக்கல்லில் சிறிது எண்ணெய்விட்டு கட்லெட்டுகளை போட்டு பொன்னிறமாக  வறுத்து எடுக்கவும். ஒரு பக்கத்துக்கு சுமார் 2 நிமிடம் இருந்தால் போதும். சுவையான கட்லெட் தயார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

  • omancyclerace

    ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்