SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீனிவாசமங்காபுரம் அருகே கல்யாண வெங்கடேஸ்வரர் வேட்டைக்கு செல்லும் உற்சவம்

2018-07-20@ 15:26:13

திருமலை: சீனிவாசமங்காபுரம் அருகே கல்யாண வெங்கடேஸ்வரர் வேட்டைக்கு செல்லும் உற்சவத்தை அர்ச்சகர் நிகழ்த்திக்காட்டினார். திருப்பதி அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோயிலில் கடந்த 16ம் தேதி முதல் 18ம் தேதி சாக்சாத்கார உற்சவம் நடந்தது. உற்சவத்தின் முதல் நாளான 16ம் தேதி தங்க திருச்சி வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. 2வது நாளான 17ம் தேதி அனுமந்த வாகனத்தில் சுவாமி வீதி உலாவும், நேற்றுமுன்தினம் இரவு கருட வாகனத்தில் சுவாமி வீதி உலாவும் நடந்தது. இந்நிலையில், நேற்று பார்வேட்டை உற்சவம் நடத்தப்பட்டது.

இதையொட்டி, நேற்று காலை 7 மணிக்கு வாரி மெட்டு மலையடிவாரத்துக்கு அருகே உள்ள மண்டபத்துக்கு கல்யாண வெங்கடேஸ்வரர் சுவாமி ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அங்கு சுவாமிக்கு சிறப்பு ஆஸ்தானம் செய்யப்பட்டு, அன்னமாச்சார்யாவின் கீர்த்தனைகள் பாடப்பட்டது. தொடர்ந்து, மாலை 4 மணியளவில் வேட்டைக்கு செல்லும் உற்சவம் நடந்தது. இதையொட்டி கல்யாண வெங்கடேஸ்வரரின் கைகளில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வேட்டை உடை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

இதையடுத்து அர்ச்சகர் கையில் ஈட்டி ஏந்தி மூன்று முறை சென்று வனவிலங்குகளை வேட்டையாடுவது போல் வேட்டை உற்சவத்தை நிகழ்த்தி காட்டினார். தொடர்ந்து கல்யாண வெங்கடேஸ்வரருக்கு பால், தயிர், தேன், இளநீர் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு, கோயிலுக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.  இதில், தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை செயல் அலுவலர் பாஸ்கர், துணை செயல் அலுவலர் வெங்கடய்யா, உதவி செயல் அலுவலர் சீனிவாசலு, இன்பெக்டர் அனில்குமார் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் தேவஸ்தானம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்