SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உங்கள் நம்பிக்கை எங்கே?

2018-07-20@ 10:00:50

‘‘ஒருநாள் இயேசுவும் அவருடைய சீடர்களும் படகில் ஏறியதும், அக்கரைக்குச் செல்வோம் வாருங்கள் என்று அவர்களுக்குச் சொன்னார். அவர்களும் படகை அக்கரைக்குச் செலுத்தினார்கள். படகு போய்க் கொண்டிருந்தபோது அவர் ஆழ்ந்து தூங்கி விட்டார். அப்பொழுது புயல் அடித்தது. படகு நீரால் நிரம்பியது. அவர்கள் ஆபத்துக்கு உள்ளானார்கள். அவர்கள் அவரிடம் வந்து ஆண்டவரே! ஆண்டவரே! சாகப்போகிறோம் என்று சொல்லி அவரை எழுப்பினார்கள். அவர் விழித்தெழுந்து, காற்றையும், நீரின் கொந்தளிப்பையும் கடிந்து கொண்டார். உடனே அவை ஓய்ந்தன; அமைதி உண்டாயிற்று. அவர் அவர்களிடம் ‘‘உங்கள் நம்பிக்கை எங்கே?’’ என்றார். அவர்கள் அச்சமும், வியப்பும் நிறைந்தவர்களாய், ‘‘இவர் காற்றுக்கும் நீருக்கும் கட்டளை இடுகிறார், அவை இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே, இவர் யாரோ? என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.’’  (லூக்கா 8:2225) அவர் ஒரு சுற்றுலாப் பிரியர்.

ஊர் ஊராகச்சுற்றிக்கொண்டே இருப்பார். எவரையும் உடன் அழைத்துச் செல்வதில்லை. தனியாகவே போவார். வருவார். ஒருமுறை அவர் வெளிநாட்டுக்குச் சென்றார். விடுதி ஒன்றில் அறை எடுத்துக் கொண்டார். குளித்துவிட்டு வெளியே புறப்பட்ட அவர், ஒரு சுற்றுலா அலுவலகத்திற்குச் சென்று அவர்கள் வெளியிட்ட குறிப்புப் புத்தகம் ஒன்றை வாங்கிப் புரட்டத் தொடங்குமுன்...ஐயா! வணக்கம் என்று ஒரு குரல். இவர் நிமிர்ந்து பார்த்தார். எதிரே ஒருவர் நின்று கொண்டிருந்தார். ஊர் சுற்றிப் பார்க்கணுமா? ஆமாம்! வாங்க நான் சுற்றிக் காட்டுகிறேன்! நீங்க யாரு? நான் ஒரு வழிகாட்டி! டூரிஸ்ட் கைடு. அப்படியா! சரி வாங்க. ஆனால், ஒரு நிபந்தனை! நிபந்தனையா? என்ன? நான் இந்த ஊரைச் சுற்றிக் காட்டும்போது குறிப்புப் புத்தகத்தை நீங்கள் உபயோகப்படுத்தக் கூடாது. ஏன்? நானே உங்களுக்கு விளக்கமாகச் சொல்வேன்.

சரி! அப்படியே ஆகட்டும்! வழிகாட்டி, பார்க்க வேண்டிய இடங்களை எல்லாம் சுற்றிக் காட்டினார். அதற்காக ஐநூறு ரூபாய் கட்டணம் பெற்றுக் கொண்டு போனார். இவர் அறைக்கு வந்து இரவு உணவை முடித்த பிறகு அந்தப் புத்தகத்தை எடுத்து சாவகாசமாகப் புரட்டினார். அந்த வழிகாட்டி ஏன் அப்படி ஒரு நிபந்தனை போட்டான்? இப்படி யோசித்தபடி கடைசி பக்கத்தைப் புரட்டினார். அதில் டூரிஸ்ட் கைடுக்கு கட்டணமாக ஐம்பது ரூபாய் தந்தால் போதும் என்று எழுதப்பட்டிருந்தது.
நண்பர்களே! ஆன்மிக வழிகாட்டிகளிலும் இப்படிப்பட்ட ஆபத்தானவர்கள் உண்டு. அறநூல்களை நீங்கள் சரியாகப் படித்து விட்டால். அதன்பிறகு  ஆண்டவனை அடையாளம் காட்ட இன்னொருவர் உங்களுக்குத் தேவைப்பட மாட்டார்.
 
‘‘மணவைப்பிரியன்’’ ஜெயதாஸ் பெர்னாண்டோ

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • gggooooverrr

  அமெரிக்காவில் கவர்னர் பதவிக்கான போட்டிக் களத்தில் திருநங்கை - தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை கவர்னர்

 • affffgaaaaa

  ஆப்கானிஸ்தானில் பள்ளியில் தற்கொலைப்படைத் தாக்குதல் - 48 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

 • iiiiiiiiiiitaaalyyy

  இத்தாலியில் நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 39 பேர் பலி

 • keeeraaalaaaa

  கேரளாவில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு 14 மாவட்டங்களிலும் 'ரெட்' அலர்ட்

 • buildingggggg1234

  சுதந்திர தின விழா - நாடு முழுவதும் அரசு கட்டிடங்கள் மூவண்ண நிறங்களில் ஜொலித்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்