SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மோர் கேக்

2018-07-19@ 16:09:14

என்னென்ன தேவை?

பச்சரிசி மாவு - 1 கப்,
புளித்த தயிர் - 1/2 கப்,
மோர் மிளகாய் அல்லது காய்ந்தமிளகாய் - 2,
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 1 டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
எண்ணெய் - 1/4 கப்,
உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?


தயிரில் உப்பு, சிறிது தண்ணீர், அரிசி மாவு சேர்த்து கட்டியில்லாமல் இட்லி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை  காயவைத்து கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, மோர் மிளகாய் தாளித்து இஞ்சி சேர்த்து வதக்கி கரைத்த மோர் கலவையை  ஊற்றி மிதமான தீயில் வைத்து கிளறவும். இந்த கலவை வெந்து சுருண்டு வந்ததும் எண்ணெய் தடவிய தட்டில் கொட்டி பரப்பி ஆறியதும் துண்டுகள்  போட்டு இட்லி மிளகாய்ப் பொடியுடன் பரிமாறவும்.

குறிப்பு:

விரும்பினால் வறுத்த முந்திரி, பொடியாக நறுக்கி வறுத்த தேங்காய்த்துண்டுகள் சேர்க்கலாம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்