SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கதம்ப சுண்டல்

2018-07-19@ 16:08:03

என்னென்ன தேவை?

கொண்டைக்கடலை, காராமணி, பச்சைப்பட்டாணி, வேர்க்கடலை, மொச்சை, சிவப்பு ராஜ்மா - தலா 1 கைப்பிடி, காய்ந்த மிளகாய் - 4, தேங்காய்த் துருவல், மாங்காய்த் துருவல் - தலா 1/2 கப், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கு, கறிவேப்பிலை - சிறிது, கடுகு, பெருங்காயத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?


தானியங்களை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் உப்பு சேர்த்து வேகவைத்து வடித்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு,  உளுத்தம்பருப்பு, கிள்ளிய காய்ந்தமிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து வேகவைத்த சுண்டலில் கொட்டி கலந்து, தேங்காய்த் துருவல்,  மாங்காய்த் துருவல் சேர்த்து கிளறி பரிமாறவும்.

குறிப்பு:

விரும்பினால் கடலைப்பருப்பு, தனியா - தலா 1/2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2 சேர்த்து வறுத்து பொடித்து கலந்து பரிமாறலாம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்