SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புனித அன்னம்மாள் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் : திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

2018-07-19@ 14:11:44

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் உள்ள அன்னம்மாள்புரத்தில் புனிதஅன்னம்மாள் ஆலயம் உள்ளது. புனிதஅன்னம்மாள் ஆலய தேர்பவனி நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்றுமுன்தினம் இரவு அருட்தந்தை ஜேம்ஸ் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. பின்னர் ஆலயத்தில்  இருந்து திருக்கொடியை ஊர்வலமாக எடுத்து வந்து திருக்கோகர்ணம் பங்குதந்தை சகாயவில்சன் தலைமையில் கொடிக்கம்பத்தில் கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்கியது. இதில் அன்னம்மாள்புரம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து விழாநாட்களில் தினமும் மாலை 7 மணிக்கு திருப்பலி நடைபெற்றுவருகிறது.

வரும் 21ம் தேதி (சனிக்கிழமை) மாலை 5.30மணியளவில் திருப்பலி நடைபெற உள்ளது. தொடர்ந்து நற்கருணை ஆராதனையும், 22ம் தேதி காலை10 மணியளவில் தியானம் நடைபெற உள்ளது. தொடர்ந்து நற்கருணை ஆராதனை நடைபெற உள்ளது. விழாவின்முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி வரும் 25ம் தேதி இரவு 7மணியளவில் நடைபெற உள்ளது. தொடர்ந்து 26ம் தேதி காலை 8.30 மணியளவில் திருவிழா கூட்டு திருப்பலி நடைபெற உள்ளது. பின்னர் 11 மணியளவில் ஆலயம் முன்புதிரளான கிறிஸ்தவர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்த உள்ளனர். தொடர்ந்து கொடியிறக்கத்துடன் புனிதஅன்னம்மாள் ஆலய திருவிழா நிறைவுபெற உள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

  • apollo

    புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்