SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

காசி ஹல்வா

2018-07-16@ 16:29:55

தேவையான பொருட்கள்:

மஞ்சள் (அ) வெள்ளை பூசணி - ஒரு துண்டு
குங்கும‌ப்பூ     - 10 இதழ்கள்
நெய்    -     100 மில்லி
உப்பு   - ஒரு சிட்டிகை
ஏலக்காய்த் தூள் - கால் தேக்கரண்டி
சர்க்கரை  -     50 கிராம்
முந்திரி - 20
 
செய்முறை:

பூசணியைத் துருவிக் கொள்ளவும். துருவிய‌ பூசணியை துணியில் போட்டு நன்கு முறுக்கிப் பிழியவும். பிழிந்த‌ தண்ணீரை தனியாகவும், பூசணி சக்கையைத் தனியாகவும் வைக்கவும். கடாயில் பூசணி தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க‌ விடவும். நன்கு கொதித்ததும் பூசணி சக்கையைச் சேர்க்கவும். பிறகு குங்கும‌ப்பூ, ஏலக்காய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறி, மூடி போட்டு பச்சை வாசம் போக‌ நன்கு வேக‌ வைக்கவும். 2 நிமிடங்களுக்கு ஒரு முறை திறந்து கிளறிவிடவும். பச்சை வாசம் போனதும் நெய் சேர்த்துக் கிளறவும். ஹல்வா நன்கு சுருண்டு வந்ததும் சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும். பிறகு நெய்யில் வறுத்த‌ முந்திரி (அ) பாதாம் சேர்த்துக் கிளறி இறக்கவும். சுவையான‌ காசி ஹல்வா தயார். குங்கும‌ப்பூ நல்ல‌ நிறத்தை தரும். அதனால் கலர் பவுடர் சேர்க்கத் தேவையில்லை.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்