SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முசிறி வெள்ளூர் திருக்காமேசப் பெருமான் கும்பாபிஷேக வரலாறு

2018-07-14@ 06:14:09

திருச்சி மாவட்டம் முசிறி அருகே வெள்ளூர் கிராமத்தில் அமைந்துள்ள திருக்காமேஸ்வரர் சிவாலயம் மிகவும் பழமை வாய்ந்தது. மன்னர்கள் வழிபட்ட இத்தலம் மிகவும் பெருமைக்கு உரியது. இங்கு இறைவியாக சிவகாமசுந்தரி அருளுகின்றார். ஆலயத்தின் பிரகாரத்தில் ஐஸ்வர்ய மஹாலட்சுமி வில்வ மரத்தடியில் ஐஸ்வர்ய மகுடத்துடன் அமர்ந்த திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். ஒருமுறை கயிலாயத்தில் பராசக்தியின் தந்தை தட்சன் யாகம் செய்தார். யாகத்திற்கு ஈசுவரனை அழைக்காமல் அவமதித்தார். இதனால் கோபம் கொண்ட அன்னை பராசக்தி தட்சன் நடத்திய யாகத்தை தடுத்து நிறுத்தி திரும்பினார். தட்சன் யாகத்திற்கு சென்ற கோபத்தால் பராசக்தியை ஈசன் நெற்றிக்கண்ணால் சுட்டெரித்தார். அன்னை மீண்டும் ஈசனுடன் சேர வரம் கேட்டாள். பூலோகத்தில் பிறந்து சிவபூஜை செய்து உரிய நேரம் வரும் போது கையிலை வர ஈசன் உத்தரவிட்டார்.

சக்தியை பிரிந்ததால் ஈசன் அசைவற்ற நிலையில் இருந்தார். பிரபஞ்சம் இயங்காததால் சக்தியையும், சிவனையும் ஒன்று சேர்க்க தேவர்கள் மன்மதனை அழைத்து ஈசன் மீது காமபானத்தை செலுத்துமாறு கூறினர்.  மன்மதன் ஈசன் மீது காமபானத்தை செலுத்தும் முன்னதாக ஈசன் நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்து சாம்பலாக்கினார். காமபானம் குறி தவறி ஈசனை நினைத்து தவம் செய்து கொண்டிருந்த பராசக்தியின் மீது படுகிறது. காமபானம் தாக்கியதால் பராசக்தியானவள் பூப்படைந்து காமசுந்தரியாகவும், சிவபெருமானை நினைத்து தவம் செய்ததால் சிவகாமசுந்தரியாகவும் பெயர் பெற்றாள். மன்மதன் செய்த தவறை மன்னித்து மன்மதனுக்கு உடலை தருமாறு ரதி ஈசனிடம் வேண்டினாள். பூலோகத்தில் சென்று சிவபூஜை செய்யும் பொழுது தேஜா ரூபம் கிடைக்கும் என ஈசன் அருளினார். வெள்ளூர் வில்வ காட்டில் ஈசனை மன்மதன் மனைவியுடன் வந்து வழிபட்ட போது இழந்த உடலை கிடைக்கப்பெற்றான்.

இதனால் ஈஸ்வரனுக்கு இத்தலத்தில் திருக்காமேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். சிவனிடம் மகுடம் பெற்ற ஐஸ்வர்ய மஹாலட்சுமி தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் வேண்டி பார்க்கடலை கடந்தபோது அமிர்தத்தை தேவர்களுக்கு மட்டும் கொடுக்க மகாவிஷ்ணு மோகினி ரூபம் எடுத்தார்.  அவதார நோக்கத்தை முடித்து திரும்பியபோது மோகினி அவதாரத்தை சிவபெருமான் மோகித்ததால் ஐயப்பன் அவதரித்தார்.  இதனால் மஹாலட்மி கோபம் கொண்டு வைகுண்டத்தை விட்டு வெளியேறி பூலோகத்திற்கு வந்து சிவபெருமானை நோக்கி கடும் தவம் மேற்கொண்டார். தவத்திற்கு மகிழ்ந்த ஈசன் மஹாலட்மி முன்பு காட்சி அளித்து அவரே சமாதானம் செய்து அவருக்கு ஐஸ்வர்ய மகுடத்தை அளித்து மஹாவிஷ்ணுவுடன் சேர்த்து வைத்தார்.  இத்தலத்தில் மஹாலட்மியை வணங்கினால் ஐஸ்வர்யங்கள் சேரும் என பக்தர்கள் நம்புகின்றனர்.

வெள்ளூர் சிவாலயத்தின் பெருமைகள்:

மஹாலட்மி ஐஸ்வர்ய மகுடத்தை பெற்ற தலம் மன்மதன் இழந்த உடலை பெற்ற தலம் முசுகுந்த சக்கரவர்த்திக்கு வலன் எனும் அசுரனை வெல்லும் ஆற்றலை கொடுத்த தலம், ராவணனுக்கு திருக்காமேசப் பெருமான் மீண்டும் உடல் வலிமை கொடுத்து ஈஸ்வர பட்டம் சூட்டிய தலம், சுக்கிரன் இத்தல ஈஸ்வரனை வழிபட்டு போகத்திற்கு அதிபதியான தலம், குபேரன் சிவபெருமானை வழிபட்டு தனாதிபதியான தலம்,போகரால் அமைக்கப்பட்ட சிவபோக சக்கர விதானம் உள்ள தலம்.

வெள்ளூர் பெயர்க்காரணம்:

வெள்ளூர் கிராமத்தில் அமைந்துள்ள திருக்காமேஸ்வர பெருமானை மன்னர்கள் போருக்கு செல்லும் முன்னதாக தங்களது வாள் மற்றும் ஆயுதங்களை வைத்து வழிபட்டு சென்றால் வெற்றி கண்டிப்பாக கிடைக்கும் என்பதால் மன்னர்கள் திருக்காமேஸ்வர பெருமானை வணங்கி போருக்கு சென்றுள்ளனர். வெற்றியைத் தரும் ஊர் என்பது வெள்ளூர் என பெயர் பெற்றுள்ளது. மன்னர்கள் அரியணையில் அமர்ந்து அரசாட்சி புரியும் முன் தன்னுடைய மகுடத்தை காமேசப் பெருமான் முன்பு வைத்து வழிபட்ட பின்பே முடி சூட்டிக் கொண்டுள்ளனர்.

இந்த காமேசப்பெருமான் வணங்கியவர்களுக்கு வேண்டிய வரம் அளிக்க வல்லவர் என்பதால் கோயிலின் முன்பக்க நுழைவு வாயிலை அடைத்து மதில் சுவர் கட்டி வேறு நாட்டு மன்னரோ, பிறரோ இவரை வழிபட்டு வரம் பெற்று விடக்கூடாது என்பதற்காக காவலர்களை நியமித்து இருந்ததாக செவி வழி தகவல் உள்ளது.  கோயில் திருப்பணி தொடங்குவதற்கு முன்பு வரை கருவறைக்கு செல்லும் முன்பக்க வாயில் அடைக்கப்பட்டிருந்தது.  பக்கவாட்டில் உள்ள வாயிலில் தான் பக்தர்கள் சென்று ஈசனையும், அம்பிகையையும் வழிபட்டு வந்தனர்.

வெள்ளூர் சித்த விரத பூமி:  

இத்தலத்தில் போகர் சிவபோக சக்கரத்தை பிரதிஷ்டை செய்து தவம் செய்ததாகவும், எங்கு சென்று தவம் செய்தாலும் சித்திக்காத காரியம் திருக்காமேஸ்வரர் சன்னதியில் அமர்ந்து தவம் செய்தால் சித்தியாகும் என்பது ஐதீகம். இத்தலத்தில் போகர், பாம்பாட்டிசித்தர் புலிப்பாணி உள்ளிட்ட பல சித்தர்கள் தவம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.  ஆலயத்தின் ஈசான பாகத்தில் அமைந்துள்ள சுரங்கத்தில் போகர் சிவலிங்க வடிவமாக காட்சியளிக்கிறார்.  இத்தலத்தில் வழிபடுவதால் தேக ஆரோக்கியம் கிடைத்தல், திருமணத்தடை நீங்குதல், குழந்தை பாக்கியம் பெறுதல், கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு நீங்கப்பெறுதல், செல்வவளம், ஞானவளம், அரசியலில் உயர் பதவி கிடைக்கப்பெறும் என்பது இப்பகுதி பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • artexpo

  சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

 • modimeetmaurico

  பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

 • Switzerlandhorse

  சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

 • germanyrecord

  ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

 • omancyclerace

  ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்