SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கடவுள் படைத்த அனைத்தும் நல்லதே!

2018-07-12@ 15:36:41

‘‘தூய ஆவியார் தெளிவாய்க் கூறுகிறபடி, இறுதிக் காலத்தில் சிலர் ஏமாற்றும் ஆவிகளுக்கும், பேய்களின் போதனைகளுக்கும் செவி சாய்த்து, விசுவாசத்தை விட்டு விலகிப் போவர். அலகைக்கு உரியவர் என்னும் குறியிடப்பட்ட மனச்சான்று உடைய பொய்யர்களின் வெளி வேடத்தால் கவரப்படுவர். அந்தப் பொய்யர்கள் திருமணத்தை தடை செய்கிறார்கள். சில உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள். ஆனால், உண்மையை அறிந்த விசுவாசிகள் நன்றியுணர்வுடன் பெற்று உண்பதற்கே அந்த உணவுகளைக் கடவுள் படைத்தார். கடவுள் படைத்த அனைத்தும் நல்லதே! நன்றி உணர்வுடன் ஏற்றுக் கொண்டால் எதையும் விலக்க வேண்டியதில்லை. ஏனெனில், கடவுளின் வார்த்தையும், நமது மன்றாட்டும் அதைத் தூயதாக்கும். இவற்றை நீ மற்றவருக்கு எடுத்துக் கூறினால் நீ கிறிஸ்து இயேசுவின் நல்ல தொண்டனாய் இருப்பாய். நீ பின்பற்றி வருகிற விசுவாசக் கோட்பாடுகளாலும், நற்போதனைகளாலும் வளர்ச்சி பெறுவாய். உலகப்போக்கிலான புனைக் கதைகளையும், பாட்டிக் கதைகளையும் விட்டு விலகு. இறைப்பற்றில் நீ வளரப் பயிற்சி செய். ஏனென்றால், உடற்பயிற்சி ஓரளவுதான் பயன் தரும். ஆனால், இறைப்பற்று எல்லா வகையிலும் பயன் தரும்.

இது இம்மையிலும், மறுமையிலும் நாம் வாழ்வு பெறுவோம் என்னும் வாக்குறுதியைக் கொண்டுள்ளது.  இக்கூற்று உண்மையானது. எல்லாராலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது. வாழும் கடவுளை எதிர்நோக்கி இருப்பதால்தான் நாம் வருந்தி உழைத்து வருகின்றோம். அவரே எல்லாருக்கும், சிறப்பாக நம்பிக்கை கொண்டோருக்கும் மீட்பர். இவற்றைக் கட்டளையாகக் கொடுத்துக் கற்பித்து வா. இளைஞனாய் இருப்பதால் யாரும் உன்னைத் தாழ்வாகக் கருதாதிருக்கட்டும். பேச்சு, நடத்தை, அன்பு, நம்பிக்கை, தூய்மை ஆகியவற்றில் நீ விசுவாசிகளுக்கு முன்மாதிரியாய் விளங்கு. நான் வரும் வரை விசுவாசிகளுக்கு மறை நூலைப் படித்துக்காட்டுவதிலும், அறிவுரை வழங்குவதிலும், கற்பிப்பதிலும் உள்ளம் செலுத்து. இறைவாக்கு உரைத்து மூப்பர்கள் உன்மீது கைகளை வைத்து திருப்பணியில் அமர்த்தியபோது உனக்கு அளிக்கப்பட்ட அருட்கொடையைக் குறித்து அக்கறையற்றவனாய் இராதே. இவை எல்லாவற்றிலும் கவனம் செலுத்து. இவைகளிலேயே ஈடுபட்டிரு. அப்பொழுது நீ அடைந்துள்ள வளர்ச்சி எல்லாருக்கும் தெளிவாகும்.

உன்னைப் பற்றியும், உனது போதனையைப்பற்றியும் கருத்தாயிரு. அவைகளில் நிலைத்திரு. இவ்வாறு செய்தால் நீயும் மீட்படைவாய். உனக்குச் செவிசாய்ப்போரும் மீட்படைவர்.  (1 தீமோத்தேயு 4:116) மனம் ஒருமைப்பட்டால் சிந்தனைகள் சீராகும். சிந்தனைகள் சீர்பட்டால் செயல்கள் செவ்வனே நடக்கும். சிந்தனையும் செயலும் ஒருமித்தால் நியாயம் அநியாயங்கள் தெளிவாகும். அத்தெளிவு உண்டானால் மனசுமை உண்டாகும். விவேகமற்றவர் சிந்திப்பதில்லை. விவேகமுள்ளவர் மனப்பக்குவம் அடைகிறார். இரண்டிலும் இடைப்பட்டவர் பந்துபோல் அங்குமிங்கும் அலைக்கழிக்கப்படுகிறார். மனிதனின் மனதுக்கு முதல் தேவை அமைதியும் நிம்மதியுமே! விரும்பியது கிடைக்காவிட்டால் கிடைத்ததை விரும்பு. செல்வம் என்பது செல்வதற்காக வருவதுதான். செத்த பிணத்திற்குமுன் இனி சாகப்போகும் பிணங்களே கதறி அழுகின்றன. ஆம்! கதை ஒருநாள் முடியப் போகிறது. சிலர் அழுது முடிக்கப் போகிறார்கள். பிறகு எல்லோரும் மறந்துவிடப் போகிறார்கள். இடையூறுகளைக் களைந்துகொண்டே இருக்க வேண்டும். இடையூறுகள் வந்தே தீரும். அவற்றுக்குப் பயப்படக்கூடாது.
 
‘‘மணவைப்பிரியன்’’ ஜெயதாஸ் பெர்னாண்டோ

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்