SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா : ஜூலை 15ல் கொடியேற்றம்

2018-07-12@ 15:00:56

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா வரும் 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்ற ஆன்றோர் வாக்கின்படி தமிழக விவசாயப் பெருமக்கள் ஆடி மாதத்தில் விதை விதைத்து நாற்று நட்டு விவசாயப் பணிகளை மேற்கொள்வர். அவர்கள் தங்கள் விளை நிலங்களில் பயிர்கள் அமோக விளைச்சல் வேண்டி முளைக்கட்டு வைத்து இறைவனை வழிபடுவர். ஆடி முளைக் கொட்டுத் திருவிழாவில் அம்மன் சந்நிதி முன்னுள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் ஜூலை 14ம் தேதி முதல் 24ம் தேதி வரை திருவிழா நடைபெறும்.

இதில் மீனாட்சி அம்மன் பஞ்சமூர்திகளுடன் காலை, மாலை ஆகிய நேரங்களில் ஆடி வீதியில் சிறப்பு நாதஸ்வர, தவில் இன்னிசையுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருஉலா வருவர். நாதஸ்வர கலைஞர்கள் கொட்டுமேளம் எனும் சிறப்பு இன்னிசை மீட்டு அம்மனை ஊர்வலமாகக் கொண்டு செல்வர். ஏழாம் திருநாள் அன்று இரவு திருவீதியுலா முடிந்த பின் உற்சவர் சந்நிதியில் அம்மன், சுவாமி மாலை மாற்றும் வைபவம் நடைபெறும்.

விவசாயம் வளம் பெறவும், நாடு செழிக்கவும் வகை செய்யும் ஐதீகத்தில் அமைந்ததே இந்த ஆடி முளைக்கொட்டுத் திருவிழாவாகும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை கமிஷனர் நடராஜன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர். விழாவை முன்னிட்டு ஜூலை 14ம் தேதி முதல் 24ம் தேதி வரை மீனாட்சி அம்மனுக்கு தங்கரத உலா, உபய திருக்கல்யாணம் போன்ற சேவைகள் பதிவு செய்து நடத்திட இயலாது என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • thailand_boys_prayer

  தாய்லாந்து குகையில் மீட்கப்பட்ட சிறுவர்கள், அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பியதை எண்ணி பிரார்த்தனை!

 • Chinesestudentsskillssummer

  திறமைகளை வளர்ப்பது மூலம் கோடை விடுமுறையை செலவிடுகின்றனர் சீன மாணவர்கள்

 • watermelonasrita

  தமது வயிற்றில் அதிக தர்பூசணியை வைத்து தாமே வெட்டி சாதனை படைத்த அஸ்ரிதா ஃபர்மேன்

 • harry_megan_mandela

  லண்டனில் நெல்சன் மண்டேலா கண்காட்சிக்கு வருகை புரிந்த இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே!: புகைப்படங்கள்

 • ethiopia_eritria_flight

  எத்தியோப்பியா-எரிட்ரியா இடையே விமான சேவை: 20 ஆண்டுக்கு பின் கண்ணீர் மல்க உறவினர்களை வரவேற்ற மக்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்