SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவையாறில் ஐயாறப்பர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்

2018-07-12@ 14:59:24

திருவையாறு: திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் ரூ.50 லட்சம் மதிப்பில் செய்யப்பட்ட புதிய தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தஞ்சை மாவட்டம் திருவையாறில் தருமபுர ஆதினத்துக்கு சொந்தமான ஐயாறப்பர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவின்போது தேரோட்டம் நடைபெறும். பழைய தேர் பழுதானதால் தேவஸ்தான நிதி, பொதுமக்கள் நன்கொடையென ரூ.50 லட்சம் மதிப்பில் 18 அடி உயரம், 12.9 அடி அகலத்தில் பழமைமாறாமல் புதிய தேர் செய்யப்பட்டது.

இதைதொடர்ந்து திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் புதிய தேர் வெள்ளோட்டம் நேற்று காலை நடந்தது. முன்னதாக தேருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதைதொடர்ந்து தேர் வெள்ளோட்டத்தை இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்மந்த சுவாமி துவக்கி வைத்தார். வடம் பிடித்து பக்தர்கள் தேர் இழுத்தனர். கீழவீதி, மேலவீதி, தெற்குவீதி, வடக்குவீதிகளில் வலம் வந்து கோயிலில் தேர் நிலைநிறுத்தப்பட்டது. முன்னாள் எம்எல்ஏ ரத்தினசாமி, முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் இளங்கோவன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்றனர். தேர் வெள்ளோட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை இன்ஸ்பெக்டர்கள் ஸ்ரீதர், பழனிமுத்து தலைமையில் போலீசார் மேற்கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahipoornima

    கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

  • AeroShowBangalore19

    பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

  • ChennaiMarinaMaasiMagam

    மாசி மகத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் புகைப்படங்கள்

  • AlbinoTurtleheart

    உடலின் வெளிப்புறத்தில் இதயத்துடன் பிறந்துள்ள அபூர்வ வெள்ளை ஆமை: ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!

  • ModiSalmanDelhi

    சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்