SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூர வளைகாப்பு வைபவம்

2018-07-12@ 14:58:38

நெல்லை: நெல்லையப்பர் கோயிலில் நடந்த ஆடிப்பூர வளைகாப்பு வைபவத்தில்  திரளான பெண்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பிரசித்தி  பெற்ற நெல்லையப்பர் கோயிலில் கடந்த 8ம் தேதி ஆடிப்பூரத் திருவிழா அம்பாள் சன்னதியில் உள்ள  கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடக்கும் விழாவையொட்டி தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு  வழிபாடு நடைபெற்று வருகிறது. 4ம் திருவிழாவான நேற்று பிற்பகல் 12 மணிக்கு  காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் ஊஞ்சல் மண்டபத்தில் நடந்தது.

வாழ்க்கை தத்துவத்தை விளக்கும் வகையில் அம்பாளுக்கு ஐப்பசியில் திருக்கல்யாண வைபவம் நடைபெறுவதைத் தொடர்ந்து ஆடிப்பூர திருவிழாவின் 4ம் திருநாளில் வளைகாப்பு வைபவம் நடைபெறுகிறது. இதையொட்டி வளைகாப்புக்குரிய பலகார சீர் பொருட்கள், உணவு பதார்த்தங்களுடன் அம்பாள், மேளதாளம் முழங்க சுவாமி சன்னதிக்கு சென்று பின்னர் அங்கிருந்து ஊஞ்சல் மண்டபத்தை 12 மணிக்கு வந்தடைந்தார். அங்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

அப்போது அம்பாளுக்கு பச்சை நிற பட்டுச் சேலை சார்த்தப்பட்டது. காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. திருமணம் ஆகாத பெண் பக்தர்கள் விரைவில் திருமணம் வேண்டியும், குழந்தை பாக்கியம் இல்லாத பக்தர்கள் குழந்தை பாக்கியம் வேண்டியும்,  குடும்ப நன்மை வேண்டியும் வளையல்களை வாங்கி அம்பாளுக்கு காணிக்கையாக செலுத்தினர். விழாவில் திரளான பெண்கள் பங்கேற்றனர்.வளைகாப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து கோயில் சார்பிலும் பல்வேறு பக்தர்கள் மற்றும் அமைப்பினரும் பெண்களுக்கு வளையல்களை வழங்கினர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்