SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உத்தமபாளையத்தில் யோக நரசிங்க பெருமாள் கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை

2018-07-12@ 14:57:08

உத்தமபாளையம்: உத்தமபாளையத்தில் பழமை வாய்ந்த யோக நரசிங்கபெருமாள் கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. உத்தமபாளையம் நகரம் ஆன்மீக பூமியாக உள்ளது. பழமை வாய்ந்த திருக்காளாத்தீஸ்வரர், ஞானம்மன் கோயில், சமணர் சிற்பங்கள், யோகநரசிங்கபெருமாள் கோயில் ஆகியவை உள்ளன. சுமார் 700 ஆண்டுகளுக்கு முந்தைய யோகநரசிங்கபெருமாள் கோயிலில் சுமார் 76 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ஆக,. 23ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. பக்தர்கள் திரட்டிய ரூ.1 கோடி நிதியில் புனரமைப்பு பணிகள் நடந்தன.

கம்பம் ராமலிங்கம் பிள்ளை டிரஸ்ட் சார்பில் கோயிலை புனரமைக்க நிதி அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பொதுமக்கள், நமோ நாராயண பக்தர் சபையினர் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கோயிலின் உள்ளே கொடிமரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக காலை முதலே சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. நிகழ்ச்சியில் பி.டி.ஆர்.விஜயராஜன், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் செந்தில்குமார், கர்ணம் ஹவுஸ் குடும்பத்தினர் மற்றும் ஏராளாமானோர் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-11-2018

    16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்