SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லவங்க லதா

2018-07-11@ 14:57:06

என்னென்ன தேவை?

மேல் மாவிற்கு:

மைதா - 2 கப்,
லவங்கம் (கிராம்பு) - 12,
நெய் - 1லு டேபிள்ஸ்பூன்,
உப்பு - 1 சிட்டிகை,
பொரிக்க எண்ணெய் அல்லது நெய் - தேவைக்கு.

பூரணத்திற்கு:

தேங்காய்த் துருவல் அல்லது கொப்பரை துருவல் - 1 கப்,
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,
சர்க்கரைத்தூள் - 1/2 கப்,
பொடித்த முந்திரி, பாதாம், பிஸ்தா, காய்ந்ததிராட்சையாவும் கலந்தது - 1/2 கப்,
கோவா - 100 கிராம்.

பாகு செய்ய:

சர்க்கரை - 1 கப்,
தண்ணீர் - 1/2 கப்,
எலுமிச்சைச்சாறு - 1/4 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

மேல் மாவிற்கு கொடுத்த பொருட்களை ஒன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 1/2 மணி நேரம்  மூடி வைக்கவும். பூரணத்திற்கு கொடுத்த பொருட்களை கலந்து நன்றாக பிசறி கொள்ளவும். பாகிற்கு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து  கொதிக்க விட்டு ஒரு கம்பி பாகு பதம் வந்ததும் இறக்கி எலுமிச்சைச்சாறு சேர்க்கவும்.

பிசைந்த மாவிலிருந்து எலுமிச்சைப்பழ அளவு மாவு எடுத்து மெல்லியதாக வட்டமாக பூரி போல் தேய்த்து, நடுவில் 1 டேபிள்ஸ்பூன் பூரணத்தை  வைத்து சுற்றிலும் தண்ணீர் தடவி இரண்டு பக்கத்திலிருந்து மடித்து சீல் செய்து, மீண்டும் திருப்பிப் போட்டு அடுத்த பாகத்தை மடித்து சதுர வடிவமாக  செய்து ஒரு லவங்கத்தை குத்தி பிரியாமல் செய்து கொள்ளவும். கடாயில் நெய் ஊற்றி மிதமான சூட்டில் வைத்து லவங்க லதாவை போட்டு  கரகரப்பாக பொரித்தெடுத்து சிறிது சூடான பாகில் போட்டு எடுத்து ஆறியதும் பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-01-2019

    20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்