SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அந்தோணியார் ஆலயத் திருவிழா ராமேஸ்வரத்தில் தேர்ப்பவனி

2018-07-11@ 14:25:45

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கடற்கரை அந்தோணியார் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு தேர்ப்பவனி, கடல் பவனி நடைபெற்றது. ராமேஸ்வரம் துறைமுகக் கடற்கரையில் அமைந்துள்ள கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதையொட்டி சிவகங்கை மறைமாவட்ட நிர்வாகி பாதிரியார் பாக்கியநாதன் தலைமையில் ஆலயத்தின் முன் சிறப்புத் திருப்பலி பூஜை நடைபெற்றது. பக்தர்களின் சிறப்புப் பிரார்த்தனையைத் தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அந்தோணியார் சிலை வைக்கப்பட்டு துறைமுக வீதி, வேர்கோடு பகுதியில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
தொடர்ந்து மீனவர் அந்தோணிக்குச் சொந்தமான மின்விளக்குகள் அலங்கரிக்கப்பட்ட விசைப்படகில் அந்தோணியார் சிலை வைக்கப்பட்டு கடல் பவனி நடைபெற்றது. ராமேஸ்வரம் வேர்க்கொட்டு பாதிரியார் தேவசகாயம், தங்கச்சிமடம் பாதிரியார் பிரிட்டோ ஜெபமாலை, பாம்பன் பாதிரியார் சந்தியாகு உட்பட ஏராளமான கிறிஸ்தவர்கள், மீனவர்கள் பங்கேற்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 13-11-2018

    13-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • HodeidahYemen

    ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரம்...! ஹூடேடா துறைமுகத்தில் நடந்த சண்டையில் 61 பேர் பலி

  • PizzaGuinnessArgentina

    அர்ஜென்டினாவில் 12 மணி நேரத்தில் 11,287 பீட்சாக்களை தயாரித்து சமையல் கலைஞர்கள் கின்னஸ் சாதனை

  • JordanFloodPetra12

    ஜோர்டானில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலி: மீட்பு பணிகள் தீவிரம்

  • EbolaCongoAfrica200

    தீவிரமடையும் எபோலா வைரஸ்..: ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 200 பேர் பலி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்