SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குடுமியுடன் பாலதண்டாயுதபாணி

2018-07-11@ 09:38:36

திருப்பந்துறை நாச்சியார் கோயில் பூந்தோட்டத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது, ஈசன்  சிவானந்தேஸ்வரர். இறைவி   மங்களாம்பிகை. சம்பந்தர், மாணிக்கவாசகர் பாடிய தலம். ஈழத்திலிருந்து வந்த பெளத்தர்கள் சமய வாதம் புரிந்த பொழுது அரசனின் ஊமைப் பெண் உடனிருந்தார். மாணிக்கவாசகர், ஊமைப் பெண் முன்னிலையில் வாதம் செய்து திருச்சாழல் பாடி முடித்த உடன் ஊமைப் பெண் பேசிய தலம். முருகன் ஓம் என்ற பிரணவ மந்திரத்தை தந்தை ஈசனுக்கு ஓதிய பின்பு, தன் செயலை எண்ணி வருந்தி திருமாலிடம் முறையிட்டார். முதலில் திருமாலின் அறிவுரைப்படி சேங்கனூரில் சிவலிங்க பிரதிஷ்டை செய்தும் மனதாற வணங்கியும் மன அமைதி கிடைக்கப் பெறாமல் வாய்மூடி மெளனியானார்.

திருப்பந்துறையில் லிங்க பிரதிஷ்டை செய்து பிரணவேஸ்வரர் என பெயரிட்டு தொழுது மெளனியாக இருந்த முருகன் மீண்டும் இத்தலத்தில் பேசும் திறன் பெற்றார். ஈசனுக்கு எதிரில் சின்முத்திரையுடன், தண்டத்துடன், தியானநிலையில் தலையில் குடுமியுடன் பாலதண்டாயுதபாணியாக இத்தலத்தில் காட்சி தருகிறார். திக்குவாய் குறைபாடு உள்ளவர்கள் இத்தல முருகனுக்கு 48 நாட்கள் தேனபிஷேகம் செய்து வழிபட்டால் நன்கு பேசும் திறன் பெறுவர். மழலைகளும் நன்கு பேசுவர். முருகனுக்கு பாதுகாப்பாக குகை மற்றும் சாட்சி விநாயகர் என்ற இரட்டை விநாயகர் உள்ள தலமிது!

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

  • smallrobochina

    சீனாவில் அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்கும் சிறிய ரோபா வடிவமைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்