SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

தூய பாத்திமா அன்னை ஆலயத்தில் 45ம் ஆண்டு தேர் திருவிழா கோலாகலம்

2018-07-10@ 14:16:14

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை ஆலயத்தின் 45ம் ஆண்டு தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில், கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். கிருஷ்ணகிரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை திருத்தலத்தின் 45ம் ஆண்டு திருத்தல தேர் திருவிழா கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் நாள்தோறும் ஆலயத்தில், பங்கு தந்தையர்கள் தலைமையில் திருப்பலி பூஜைகளும், மறையுரைகளும் நிகழ்த்தப்பட்டது. மாலை நேரங்களில் தேவாலயத்தை சுற்றி சிறிய தேர்பவனி நடைபெற்று வந்தது.

இந்த தேர்த் திருவிழாவின் கடைசி நாளான நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடந்தது. மாலை 7 மணிக்கு வண்ண விளக்குளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட அன்னையின் பெரிய தேர்பவனியை மறைமாவட்ட முதன்மை குரு அம்புரோஸ் மந்திரித்து வழியனுப்பினர். ராயப்ப முதலி தெரு, கூட்டுறவு காலனி சாலை, 5 ரோடு ரவுண்டானா, காந்தி சாலை வழியாக தேர் பவனி சென்றது.

நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டைய மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்று, தங்களின் வேண்டுதலை நிறைவேற்றியதற்காக திருத்தேர் மீது உப்பு, மிளகு மற்றும் மலர்களை தூவி நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த நிகழ்ச்சியினையொட்டி தேவாலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தை சூசைராஜ் மற்றும் பங்கு பேரவையினர், பங்கு மக்கள் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • israel_newfasttrain

    இஸ்ரேலில் அதிவேக இரயில் திறப்பு - மக்கள் உற்சாகம் !

  • virataward_1234

    விராட் கோலி, மீராபாய் சானுவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது - ஜனாதிபதி வழங்கி கௌரவித்தார் !

  • 26-09-2018

    26-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • autumnfestivalchina

    சீனாவில் இலையுதிர் காலம் நிறைவு விழாவையடுத்து வண்ண விளக்குகளால் ஜொலித்த நகரங்கள்

  • drumpsusma

    நியூயார்க் ஐ.நா. தலைமையகத்தில் 73வது பொதுக்குழு கூட்டம் : உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்