SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கருணைக் கருவூலம் நாமகிரித் தாயார்!

2018-07-10@ 09:50:12

நாமகிரி தாயாரின் கருணைக் கண்கள் கவலைகளைப் போக்கும் பேரழகு வாய்ந்தவை. நாமகிரித் தாயார், தாமரைக் கண்கள் கொண்டவள். தாமரை  முகத்தாள், தாமரைக் கரத்தாள். அவள் பாதங்களும் பத்மம். அவள் பிறந்ததும் தாமரையிலே, அமர்ந்திருப்பதும் தாமரையிலே, கைகளில்  கொண்டிருப்பதும் தாமரையையே. புராணங்களின் கூற்றுப்படி, இத்திருக்கோயில் தேவசிற்பி விஸ்வகர்மாவால் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல்  வந்து தாயாரை வணங்கும் பக்தர்கள் தங்கள் குறைகளையும் அவரிடம் சமர்ப்பிக்கின்றனர். நோய்களிலிருந்து விடுதலை பெறவும், சந்தான பாக்கியம் வேண்டியும், பிற வேண்டுதல்களையும் வைக்கின்றனர். கனிந்த காலத்தில் நாமகிரி அன்னையின் கருணையால் அவர்கள் குறைகள் நீங்கப் பெற்று மகிழ்வடைகின்றனர். நரசிம்மர் கோயிலை பொறுத்தவரை நாமகிரித தாயாருக்கே முதலிடம். இங்கு வரும் பக்தர்கள் தாமரை மலரை அர்ப்பணித்து, தாயாரை முதலில் தரிசித்து பிறகே நரசிம்மப் பெருமாளை வழிபடுகிறார்கள். இவர்களுக்கு அடுத்து ஆஞ்சநேயரையும் வணங்க வேண்டும்.

இதுதான் இங்குள்ள வழிபடு மரபு. உலகம் போற்றும் கணிதமேதை ராமானுஜரின் கனவில் தோன்றி கணக்குகளுக்கு விடை தந்தருளிய தெய்வமாக  நாமகிரித் தாயாரை போற்றுகின்றனர். ராமானுஜர் இங்கு வந்து நாமகிரித்தாயாரை வணங்கி அருள் பெற்றதாகவும் கூறப்படுகிறது. எனவே நாமகிரித்  தாயாரை வணங்குவதால் கலை, கல்வி, ஞானம், செல்வங்கள் கிடைக்கும். நாமகிரித் தாயார், நரசிம்மர் ஆலயங்களில் பன்னிரு முறை பக்தர்கள்  வலம் வருகிறார்கள். இப்படி வலம் வருவதால் பேய், பிசாசு, பில்லிசூன்யம், ஏவல், தீராத நோய்கள், சந்ததியின்மை போன்ற குறைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. நாமகிரித்தாயார், நரசிம்மர் திருக்கோவில் காலை 6.30 முதல் 10மணி வரையிலும் மாலை 4.30 முதல் இரவு 9மணி வரையிலும் திறந்திருக்கும். காலைபூஜை 8 மணிமுதல் 9.30 மணிவரை நடக்கும். உச்சி காலப்பூஜை காலை 11 மணிக்கு துவங்கி 12.30 மணிக்கு முடியும். நாமகிரி த்தாயாரை, நரசிம்மரையும் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு குங்குமம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

பக்தர்கள் புடவை, ஆபரணங்கள், குழந்தைகளுக்கு முடி எடுத்தல் போன்ற காணிக்கைகளை செலுத்தி சுவாமியையும், தாயாரையும் வழிபடுகிறார்கள். குழந்தைகளுக்கு நரசிம்மன், நாமகிரி என்று பெயர் சூட்டி மகிழ்கிறார்கள். தங்கள் வாழ்வை நிறைவாக்கிய அன்னைக்குக் காணிக்கைகள், சேலைகள்,  நகைகளை பக்தர்கள் சமர்ப்பிக்கின்றனர். நாமகிரித் தாயாருக்கு பத்து நாட்கள் தசரா திருவிழா கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி  மாதத்தில் ஹஸ்த நட்சத்திரத்தில் நரசிம்மர், ரங்கநாதர், அனுமன் ஆகியோருக்குத் தேர்த் திருவிழா சிறப்பாக 15 நாட்களுக்கு நடைபெறுகிறது. பங்குனி உத்திரத்திற்கு அடுத்தநாள் வரும் ஹஸ்த நட்சத்திரத்தில், கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. இதில் 13நாட்கள், கோயில் மாடவீதிகளை சுற்றி உற்சவமூர்த்திகளாக சுவாமியும், தாயாரும் வீதியுலா வருவது சிறப்பு. இது திருமாலும், தாயாரும் மக்களை தேடி வந்து குறை தீர்க்கும் விழாவாக கருதப்படுகிறது.  

நாமகிரி தாயாரின் திருநட்சத்திரமான பங்குனி உத்திரத்தில், உற்சவ நரசிம்மர் தாயார் சந்நிதிக்கு எழுந்தருளி, திருமஞ்சனம் உள்ளிட்ட ஆராதனைகள் கண்டருளி திருக்கல்யாண கோலத்துடன் காட்சியளிக்கிறார். இதேபோல், சித்ராபவுர்ணமி நாளில் நடக்கும் திருவிளக்கு பூஜை, மிகவும் சிறப்பு பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் மஞ்சள், குங்குமம், மஞ்சள் அட்சதை, குத்துவிளக்கு, தாம்பாளம் உள்ளிட்ட பொருட்களுடன் வந்து பூஜை  செய்கின்றனர். இதனால் மாங்கல்யம் நிலைக்கும், இல்லறம் தழைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. இந்த விழாக்களில் கடல் அலையென மக்கள்  கூட்டம் அலைமோதுகிறது. மார்கழி மாத அமாவாசையன்று அனைத்து பக்தர்களாலும் அனுமன் ஜெயந்தி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நாமகிரி  என்ற பெயரில் உள்ள எழுத்துகள் மிகவும் அபூர்வமானது என்கின்றனர் சாஸ்திர வல்லுநர்கள். ‘நா’ பாவத்தை நசிக்கிறது. ‘ம’ மங்களம் அருள்கிறது. ‘கி’  காரிய சித்தி பெறவைக்கிறது. ‘ரி’ மோட்சத்துடன் வீடுபேறு அளிக்கிறது என்கின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • artexpo

  சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

 • modimeetmaurico

  பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

 • Switzerlandhorse

  சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

 • germanyrecord

  ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

 • omancyclerace

  ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்