SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அறிவுரை பெறுவோர் உண்டா?

2018-07-09@ 16:26:21

திருக்குர்ஆனுக்கும் பாமர மக்களுக்கும் இடையில் அறிந்தோ அறியாமலோ பலர் பல தடைகளைப் போட்டு வைத்துள்ளனர். “எளிய பாமர மக்களால்  குர்ஆனைப் படித்துப் புரிந்து கொள்ள முடியாது. திருக்குர்ஆன் ஆய்வு தொடர்பாக ஏராளமான கலைகள் உள்ளன. அந்தக் கலைகள் அனைத்திலும் தேறியிருந்தால்தான் ஒருவர் குர்ஆனைப் புரிந்துகொள்ள முடியும்” என்றெல்லாம் சிலர் பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள். எளிய மக்களைக் குர்ஆனின் பக்கம் நெருங்கவிடாமல் போடப்பட்டுள்ள இந்தத் தடைச் சுவரைக் குர்ஆனே தள்ளித் தகர்க்கிறது “அல்கமர்” அத்தியாயத்தின் மூலம். திருக்குர்ஆனின் 54ஆம் அத்தியாயம் அல்கமர் என்பது. இது நபி(ஸல்) அவர்கள் அதிகமாக ஓதி வந்த அத்தியாயம் ஆகும். நபிகளார் ஓதக் கேட்டே நபித்தோழர்கள் பலர் இந்த அத்தியாயத்தை மனப்பாடம் செய்து விட்டார்கள். அந்த அளவுக்கு அதிகமாக ஓதப்பட்ட அத்தியாயம்.

இந்த அத்தியாயத்தில் மீண்டும் மீண்டும் ஒரு திருவசனம் இடம்பெறுகிறது. “நாம் இந்தக் குர்ஆனை அறிவுரை பெறுவதற்கான எளிய வழியாக அமைத்துள்ளோம். அறிவுரை பெறுபவர் எவரேனும் உண்டா?” 17, 22, 32, 40 ஆகிய வசனங்களில் இதே வசனம் மீண்டும் மீண்டும் வருகிறது. நான்கு முறை இந்தக் கேள்வியை இறைவன் எழுப்புகிறான். “அறிவுரை பெற வாருங்கள்”என்றும் அன்புடன் அழைக்கிறான். நபிகளாரின் தோழர்களில் சிலர் அரபு மொழியைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்கள். சல்மான் பார்ஸி, சுஹைப் ரூமி, பிலால் போன்றவர்கள் அத்தகைய தோழர்களுள் குறிப்பிடத் தகுந்தவர்கள்.

பிலால் அவர்கள் கறுப்பு நிற அடிமை ஆவார். இவர்களின் தாய் மொழி அரபு அல்ல; எனினும், அரபு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட இதர நபித்தோழர்கள் எப்படிக் குர்ஆனைப் புரிந்து கொண்டார்களோ அப்படியே இவர்களும் எளிதாகப் புரிந்து கொண்டார்கள். மனனம் செய்வதற்கும் சரி, படிப்பினை பெறுவதற்கும் சரி, குர்ஆனைப் போல் மிக எளிமையான ஒரு நூலை உலகில் எங்கும் காண முடியாது. குர்ஆனிலிருந்து படிப்பினை பெற்று நம் வாழ்வைச் சீரமைத்துக் கொள்வதற்குப் பெரிய பெரிய பண்டிதர்களாய் இருக்கவேண்டும் என்றெல்லாம் எந்தக் கட்டாயமும் இல்லை. பண்டிதர்கள் மட்டு மல்ல, பாமரர்களும்  குர்ஆனை ஓதலாம். பொருள் அறியலாம். படிப்பினை பெறலாம்.“அறிவுரை பெற எவரேனும் இருக்கிறார்களா?”அழைக்கிறான் இறைவன்.

இந்த வார சிந்தனை

“இது(திருக்குர்ஆன்) உலக மக்கள் அனைவருக்கும் ஒரு நல்லுரையே அன்றி வேறில்லை.” (குர்ஆன்68:52)

சிராஜுல்ஹஸன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • HodeidahYemen

    ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரம்...! ஹூடேடா துறைமுகத்தில் நடந்த சண்டையில் 61 பேர் பலி

  • PizzaGuinnessArgentina

    அர்ஜென்டினாவில் 12 மணி நேரத்தில் 11,287 பீட்சாக்களை தயாரித்து சமையல் கலைஞர்கள் கின்னஸ் சாதனை

  • JordanFloodPetra12

    ஜோர்டானில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலி: மீட்பு பணிகள் தீவிரம்

  • EbolaCongoAfrica200

    தீவிரமடையும் எபோலா வைரஸ்..: ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 200 பேர் பலி!

  • AssemblyChattisgarElection18

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பலத்த பாதுகாப்புடன் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு: ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்