SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

1800 ஆண்டு பழமைவாய்ந்த சீவலப்பேரி காசி விஸ்வநாத சுவாமி கோயிலில் திருவாசகம் முற்றோதுதல்

2018-07-09@ 15:52:01

நெல்லை: சுமார் 1800 ஆண்டு பழமை வாய்ந்த பாளை சீவலப்பேரி விசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதர் சுவாமி கோயில் உள்ளது. காசிக்கு சென்று வழிபாடு நடத்தினால் கிடைக்கும் பலன் இக்கோயிலில் வழிபட்டால் கிடைக்கும் என்பது  பக்தர்கள் ஐதீகம். உலக நன்மைக்காகவும், இக்கோயிலில் கடந்த 37 ஆண்டாக செயல்படாமல் இருக்கும் திருத்தேரை மீண்டும் சீரமைத்து தேரோட்டம் நடைபெறவும் வேண்டி அனைத்து சிவபக்தர்கள் குழுவினர் மற்றும் சீவலப்பேரி மக்கள் சார்பிலுலும் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது.

இதையொட்டி மாவட்டம் முழுவதும் இருந்து சிவபக்தர்கள் குழுவினர் வருகை தந்தனர். காலையில் சுவாமி, அம்பாளுக்கு பல்வேறு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையுடன் காலை முதல் மாலை வரை திருவாசகம் முற்றோதுதல் தாமோதரன் தலைமையில் நடந்தது. இதையொட்டி காலை மற்றும் மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. காலை 7.30 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி மாலை வரை நீடித்தது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். இதையொட்டி நெல்லை மற்றும் பாளையில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-07-2018

    22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்