SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஆலயம் ஒன்று மூலஸ்தானம் இரண்டு

2018-07-07@ 11:21:12

ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத பாலசுப்ரமணியர் திருக்கோயில் ஸ்ரீகாஞ்சி (மலைக்கோயில்) திருவண்ணாமலை வட்டத்தில் உள்ளது. ஒரு மூலஸ்தானத்தில் மயில் மீது அமர்ந்த ஆறுமுகன் 12 திருக்கரங்கள். மயில் இடதுபுறம் திரும்பியுள்ளது. அருகில் தேவியர் இருவர். நின்ற திருக்கோலம். இரண்டாவது மூலஸ்தானத்தில் திருநீலகண்ட பாலசுப்ரமணியர் என்ற பெயர் கொண்ட முருகன் ஒரு முகம், நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலமாக மூலவர் மட்டும் அருள்பாலிக்கிறார். மயில் வலப்பக்கம் திரும்பியுள்ளது. தேவியர் இன்றி உள்ளார்.

உற்சவர் முத்துக்குமார சுவாமி ஏழு முகங்கள், நான்கு திருக்கரங்கள். அருகில் தேவியர் இருவர் நின்ற திருக்கோலம். அபயஹஸ்தத்துடன் அருள்பாலிக்கிறார். இவர்களை வணங்கினால் திருமணத்தடை நீங்கி, மணவாழ்க்கை அமையும். சனீஸ்வரர் தனிச் சந்நதியில் உள்ளார். இத்தலம் போளூரிலிருந்து 26 கி.மீ. பருவதமலை, திருவண்ணாமலை இடையில் உள்ளது சிறப்பாகும். இம்மலையை 108 முறை சுற்றி வந்தால் பிரேத சாபம் எனப்படும் இறந்தவர்கள் கனவில் வருவதைத் தடுக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • georgiyaropecar

    ஜார்ஜியா நாட்டில் ரோப் கார்கள் மூலம் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் கிராம மக்கள்

  • chinaindustryexpo

    சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற 20வது சர்வதேச தொழில்நுட்பக் கண்காட்சி

  • thirupathiseventh

    திருப்பதியில் 7வது நாள் பிரமோற்சவம் : சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

  • 20-09-2018

    20-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • amazon_bang_111

    ஆன்லைன் வர்த்தக் நிறுவனமான அமேசானின் சேகரிப்புக் கூடம் பெங்களூருவில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்