SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெள்ளி தரிசனம் திருமணம் நிச்சயம்

2018-07-06@ 09:43:08

நல்லாத்தூர் எனும் தலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜராக அருள்பாலிக்கிறார். அந்த பச்சைக் கற்பூர வாசமும், துளசியின் மணமும் நாசியை நெருட, வரதனின் சாந்நித்திய பலம் இதயம் தாண்டி உயிரின் மையத்தையே அசைத்துப் பார்க்கிறது. அபய வரத ஹஸ்தத்தோடு அருள்பாலிக்கிறான், இத்தலத்தில் தாயார் பெருந்தேவித் தாயார் எனும் திருநாமம் பூண்டு பேரழகாக அமர்ந்திருக்கிறாள். எல்லோரையும் காத்தருளும் ஆதி மாதாவானதாலும், கருணை புரிவதில் இவளுக்கு இணை இவளே என்பதாலும், இவளுக்கு பெரியவள் எவருமில்லை என்பதாலேயே பெருந்தேவி தாயார் எனும் திருப்பெயரைக் கொண்டிருக்கிறாள்.

பெருந்தேவி தாயாருக்கு எட்டு வெள்ளிக் கிழமைகள் அல்லது நான்கு பஞ்சமி திதிகளில் அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமண பாக்கியம் எளிதில் கிட்டும்.  இத்தலம் நூற்றியெட்டு திவ்ய தேசத்தில் ஒன்றான திருவஹீந்திரபுரத்தினுடைய அபிமான தலமாகும். அருகேயே கஜலஷ்மி சகல செல்வங்களையும் தமது திருக்கண் பார்வையிலேயே கடாட்சித்து விடும் வல்லமை பெற்றவள். கஜலட்சுமியை தினமும் தரிசிக்க கடன்கள் தீரும் என்பது மூத்தோர் வாக்கு. இத்தலத்தில் கருடாழ்வார் உடலில் எட்டு நாகங்களோடு காட்சி தருகிறார். புதுச்சேரியிலிருந்து மடுகரை வழியாக விழுப்புரம் செல்லும் வழியில் ஏழு கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.  

கிருஷ்ணா

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ModiSalmanDelhi

  சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்

 • SuperSnowMoon2k19

  அதிக ஒளியுடனும், பூமிக்கு மிக அருகிலும் தெரிந்த சூப்பர் மூன்: ரம்மியமான அரிய நிகழ்வை கண்டு ரசித்த மக்கள்!

 • 20-02-2019

  20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • mallakamb_mumbai

  மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

 • varanasi_modi123

  டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்