SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மீட்க வந்தவர்

2018-07-05@ 15:56:44

இரண்டு நண்பர்கள் கோயில் மண்டபத்தில் உட்கார்ந்து தங்கள் கவலைகளைப் பகிர்ந்துகொண்டனர். வெளியூர்ல படிச்சிக்கிட்டு இருக்கிற என் பையனுக்குப் பல  கடிதங்கள் போட்டுவிட்டேன். பதிலே வரவில்லை. எப்படி இருக்கானோ தெரியலை... இந்தக்காலத்துப் பசங்க அப்படித்தான். தேவை இருந்தா மட்டும் கடிதம்  போடுவாங்க. இல்லேன்னா போட மாட்டாங்க! அப்படியா சொல்றீங்க? இப்போ வேணும்னா ஒரு பந்தயம் வச்சுக்குவோமா? உங்க பையனுக்கு நான் ஒரு கடிதம்  போடறேன்! அதுக்கு உடனே பதில் வர வைக்கிறேன். நீங்கள் என்ன சொல்றீங்க? அது எப்படி வரும்? முடியாதுங்க! அவன் பதில் எழுதவே மாட்டான். சரியான  சோம்பேறிங்க அவன். எழுத வைக்கிறேன். அது எப்படீங்க? அப்படி செஞ்சிட்டீங்கன்னா உங்களுக்கு நூறு ரூபாய் தருகிறேன். இப்படியொரு பந்தயத்தோடு  அவர்கள் பிரிந்தார்கள். அன்றைக்கு அந்தப் பையனுக்கு அவர் கடிதம் எழுதினார்.

அடுத்த மூன்றாம் நாள் அவனிடமிருந்து ஒரு கடிதம் பறந்து வந்தது. இதோ பாருங்கள்! உங்கள் மகனிடமிருந்து வந்த கடிதம்! அந்த அப்பாவுக்கு ஆச்சரியம்!   எப்படி இது? எழுத வேண்டிய முறையில் எழுதினேன், பதில் பறந்து வந்தது! என்ன எழுதினீர்கள்? அதுவா? தம்பி! உன் அப்பா சொன்னபடி நான் இந்தக்  கடிதத்துடன் உன் செலவுக்காக ஆயிரம் ரூபாய்க்கான காசோலை அனுப்பி இருக்கிறேன். பெற்றுக்கொள்ளவும் என்று கடிதம் போட்டேன்; உடனே அவனிடமிருந்து,  மாமா உங்க கடிதம் கிடைத்தது; அதில் காசோலை இணைத்து அனுப்ப மறந்து விட்டீர்கள் என்று எழுதி இருக்கிறான். இதோ அந்தக் கடிதம் என்று கடிதத்தை  நீட்டினார். அப்பா யோசிக்க ஆரம்பித்தார். பந்தயப் பணம் நூறு ரூபாயை நீட்டினார். இதெல்லாம் ஒன்றும் வேண்டாம். ஓர் உண்மையை உங்களுக்குப் புரிய  வைப்பதற்காகத்தான் அப்படி பந்தயம் கட்டினேன். என்ன உண்மை அது? மனித மனம் எதையும் இழக்க விரும்புவதில்லை! என்ன சொல்கிறீர்கள்? அதோ  பாருங்கள்! கோயில் சுவரில் என்ன எழுதி இருக்கிறது என்று... அவர் பார்த்தார்.

‘‘ஆசைகளை விட்டவனே ஆண்டவனைத் தொட்டவர்’’ இன்றைய பக்தர்களுக்கு ஆலயங்களை நெருங்கத் தெரிகிறது. ஆனால் ஆண்டவனை நெருங்கத்  தெரிவதில்லை.‘‘என்னிடம் நம்பிக்கை கொள்பவர் என்னிடம் மட்டும் அல்ல; என்னை அனுப்பியவரிடமே நம்பிக்கை கொள்கிறார். என்னைக் காண்பவரும்  என்னை அனுப்பியவரையே காண்கிறார். என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இருளில் இராதபடி நான் ஒளியாக உலகிற்கு வந்தேன். நான் கூறும் வார்த்தைகளைக்  கேட்டும் அவற்றைக் கடைப்பிடியாதவருக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்குபவர் நானல்ல. ஏனெனில், நான் உலகிற்கு தீர்ப்பு வழங்க வரவில்லை. மாறாக அதை  மீட்கவே வந்தேன். என்னைப் புறக்கணித்து நான் சொல்வதை ஏற்றுக்கொள்ளாதவருக்கு தீர்ப்பளிக்கும் ஒன்று உண்டு. என் வார்த்தையே அது. இறுதி நாளில்  அவர்களுக்கு அது தண்டனைத்தீர்ப்பு அளிக்கும். ஏனெனில், நானாக எதையும் பேசவில்லை. என்னை அனுப்பிய தந்தையே நான் என்ன சொல்ல வேண்டும், என்ன  பேச வேண்டும் என்பதுபற்றி எனக்குக் கட்டளை கொடுத்துள்ளார்.’’(யோவான் 12: 4449)

‘‘மணவைப்பிரியன்’’ஜெயதாஸ் பெர்னாண்டோ

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-09-2018

  24-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-09-2018

  23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 22-09-2018

  22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • muharamfest

  நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

 • nasaevanaktrump

  அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்