SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மைலப்புரம் பேதுரு பவுல் ஆலய விழாவில் சப்பர பவனி

2018-07-05@ 15:09:59

பாப்பாக்குடி: முக்கூடல் அருகே மைலப்புரம் புனித பேதுரு  பவுல் ஆலய திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் புனிதரின் நவநாள் ஜெபம், திருப்பலி, மறையுரை நடந்தது. மேலும் ஒப்புரவு அருட்சாதனம், அன்பிய கலைநிகழ்ச்சிகள், ஆர்சி தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி, 7ம் நாள் திருவிழாவில் அசன விருந்து ஆகியன நடந்தது. 8ம் நாள் விழாவில் திருப்பலியில் சிறுவர், சிறுமிகளுக்கு புதுநன்மை வழங்கல், சவேரியார் கெபியில் திருப்பலி, தொடர்ந்து நற்கருணை பவனி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்தது. 9ம் நாள் விழாவில் மாலை திருப்பலியை தொடர்ந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புனித பேதுரு பவுல், மரியன்னை, மிக்கேல் அதிதூதர், செபஸ்தியார் ஆகியோரின் திருவுருவ சப்பர பவனி நடந்தது.

இதில் கிறிஸ்தவர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். 10ம் திருநாள் காலை 9 மணிக்கு திருவிழா நிறைவு திருப்பலி நடந்தது. திருப்பலியை குருவானவர்கள் சவரிராஜ், பெல்லார்மின் ஆகியோர் நடத்தினர். பகலில் புனிதர்களின் சப்பர பவனி நடந்தது. மாலையில் கொடியிறக்கம், நற்கருணை ஆசீர் நடந்தது. ஏற்பாடுகளை பங்குத்தந்தை செல்வராஜ், ஆலய பொறுப்பாளர்கள் தலைவர் ஜெயபால், செயலாளர் அந்தோணிராஜ், பொருளாளர் பீட்டர், வாலிபர் இயக்க தலைவர் பவுல் மற்றும் அருட்சகோதரிகள், அன்பிய குழுவினர்கள், வாலிபர் இயக்க உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-02-2019

    19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்